தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக மதுபானக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் கடந்த மார்ச் 24 ம்தேதி முதல் மூடப்பட்டது, ஊரடங்கில் தளர்வு வழங்கப்பட்டதன் காரணமாக கடந்த மே மாதம், சென்னை தவிர மாநிலத்தின் மற்ற இடங்களில் நோய்க்கட்டுப்பாட்டு மையங்கள் தவிர 3500 இடங்களில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. சென்னையில் கடந்த ஐந்து மாதங்களாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை, பூங்கதவே தாழ்திறவாய் என்று ஏங்கி கிடந்த மது பிரியர்களுக்காக திறக்கப்படாத மதுபானக்கடைகள் இன்று முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, சமூக இடைவெளி கடைபிடித்து முகக்கவசங்கள் அணிந்து மதுபானங்கள் வாங்க வேண்டும் என்றும் நாள் தோறும் கடைகள் தோறும் 500 டோக்கன்களே வழங்கப்படும் என்று கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன, தலைநகரில் 700க்கும் மேறபட்ட மதுபான கடைகள் விழாக்கோலம் பூண்டுள்ளன கடைகளில் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு. தடுப்பு வளையங்கள் என்று தேர்தல் நேர தடுப்பு வளையங்கள் போடப்பட்டுள்ளன, இன்று முதல் தலைநகரத்தில் தள்ளாட்ட திருவிழா ஆரம்பமாகி உள்ளது, \தமிழக அரசின் இந்த விழாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் , மக்கள் நீதிமையத்தின் தலைவர் கமல்ஹாசன் அமமுக தலைவர் தினகரன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
https://www.youtube.com/watch?v=GFRbgg9SJqM&feature=youtu.be