செய்திகள் வாசிப்பது
*தமிழ்நாட்டில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மிகவும் பிரபலமானது என்று மான்கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்
இது குறித்து அவர் பேசுகையில் கடந்த காலத்தை நினைவூட்டுவதும் எதிர்காலத்தை பிரகாசமாக்குவதும் பொம்மைகள் தான் என்று அவர் கூறியுள்ளார் மேலும் உள் நாட்டு பொம்மைகளுக்கு வளமான பாரம் பரியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் அவர் மேலும் பேசுகையில்
உள்நாட்டு விளையாட்டு பொருட்களை வாங்க ஊக்குவிக்க வேண்டும், இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் விளையாட்டு பொருட்கள் ஒற்றுமையை பறைசாற்றுகிறது, குழந்தைகள் ஒன்று சேர்ந்து விளையாடும் போது ஒற்றுமை வளர்கிறது, இந்த முயற்சி நல்ல கட்டமைப்பு உருவாக்கி இருக்கிறது, விளையாட்டு என்பது வெறும் பொழுது போக்கு அல்ல தேசியக்கல்விக்கொள்கையில் கூட இதுபற்றி விவரிக்கப்பட்டுள்ளது, புதிய கல்விக்கொள்கை இந்தியாவில் பெரும் மாற்றத்தை உருவாக்கப்போகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் ,
*நாளை முதல் அரசு கலைக்கல்லுாரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்
*தமிழகத்தில் நாளை முதல் சுங்கசாவடிகளில் 10 சதவீதம் வரை கட்டண உயர்வு
* வரும் செவ்வாய்க்கிழமை திருவள்ளுவர் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் வரும் 4 ம்தேதி விழுப்புரம் மாவட்டத்திற்குநேரில் சென்று கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்துகிறார்
* சட்டசபை மக்களவை உள்ளா்ட்சி உள்ளிட்ட அனைத்து தேர்தல்களுக்கும் பொது வாக்காளர் பட்டியல் தயாரிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டது
*கட்டணம் செலு்த்தாத மாணவர்களுக்கும் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்
*ஆகஸ்ட் 31 ம்தேதிக்கு பின்னர் ஊரடங்கு தேவை தானா என்று சிந்திக்க வேண்டும் என்று தமிழக அரசை நடிகர் கமல்ஹாசன்
வலியுறுத்தியுள்ளார்
*கேரளத்தில் இருந்து நாளை முதல் 6 ம்தேதிவரை திருவனந்தபுரத்தில் இருந்து மிதவை சொகுசு பேருந்துகள் சென்னைக்கு விடப்படுகின்றன,
*எம்பிஏ , எம்.சி.ஏ படிப்புகளுக்கு ஆன்லைனின் விண்ணப்பப்பதிவுகள் இன்று முதல் தொடங்குகிறது,
*புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தொல்லியல் பட்டயப்படிப்புக்கு 320 பேர் விண்ணப்பித்துள்ளனர்,
*சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் செப்டம்பர் 7 ம்தேதி முதல் 6 அமர்வுகளில் நேரடி விசாரணை நடத்தப்படு்ம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
*காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மாற்றம் தேவை என்று கடிதம் எழுதிய 23 தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத்தை நீக்க வேண்டும் என்று உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் நசீப்பதான் வலியுறுத்தியுள்ளார்
*இந்தியாவில் பாஜகவுக்கு சாதகமாக செயல்படுவதாக எழுந்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விளக்கம் கேட்டு முகநுால் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர் பெர்க்குக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது
*திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் மாதாந்திர பிரதோஷ வழிபாடு ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது
*வீடு வீடாக கள ஆய்வு செய்து வரும் முன்களப்பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் அளிப்புதும் இல்லை என்றும் : மாநகராட்சி அதிகாரிகள் தாறுமாறாக பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது
*இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியது ஒரே நாளில் தேசிய அளவில் 76, 472 பேர் கோவியட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6, 352 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
*திருப்பதியில் 40 நாட்களுக்கு பின்னர் இலவச தரிசன டிக்கெட் விநியோகம் நேற்று தொடங்கியது கொரோனா பீதியால் கவுண்டர்கள் பெரும்பாலும் காலியாகவே இருந்தது
*வருமான வரித்துறை ஆணையராக பதவி வகித்து ஓய்வு பெற்ற எழுத்தாளர் தேவக்கோட்டை வா.மூர்த்தி தனது 74 வயதில் காலமானார் தீபம் கணையாழிஞானரதம் உள்ளிட்ட பல இதழ்களில் சிறுகதை குறுநாவல் கவிதை என்று படைப்புலகில் இயங்கிய வா.மூர்த்தி இன்று அதிகாலையில் சென்னையில் காலமானார்
*நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை தண்டையார்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 85 காங்கிரஸார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர், கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட தலைவர் திரவியம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களை நோய்த்தொற்று பரவக்கூடிய வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
குடிமகனே பெருங்குடி மகனே
*தமிழகத்தில் இன்று தளர்வற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று மதுக்கடைகளில் குடிமக்கள் வெள்ளமென குவிந்தனர், நேற்று ஒரே நாளில் 243 கோடி ரூபாயை அள்ளியது மதுக்கடைகள், லிற்பனையில் சென்னையில் ரூ 52 கோடி முதலிடம் மதுரை ரூ 49 கோடி விற்பனை செய்து இரண்டாம் இடம், கோவைக்கு கடைசி இடம் ரூ 45 கோடி மட்டும் தான் விற்பனையாம்
*திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அய்யாசாமி வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்து விட்டர், அவரது மறைவுக்கு முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்