சுதந்திர தின விழாவையொட்டி பல்வேறு விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் அதில் மகளிர் நலனுக்கான தமிழக அரசின் விருது , கிரியட் அமைப்பின் நிறுவனர் நடனசபாபதிக்கு கிடைத்துள்ளது, ,இது குறித்து நமது அலை ஓசை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் நடனசபாபதி , மகளிர் நலனுக்கான தமிழக அரசின் விருது தஙகளுக்கு வழங்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது தன்னை போன்ற தொண்டுள்ளம் படைத்தவர்களுக்கு இந்த விருதை அர்ப்பணிப்பதாக நடனசபாபதி, தெரிவித்தார்,
பெண்களின் நலனுக்காக மட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் விவசாயிகள் என்று பல்வேறு தரப்பினருக்கு தாங்கள் சேவையாற்றி வருவதாகவும் ,
அரியலுாரில் உள்ள தங்களது அமைப்பின் விவசாயிகளுக்கான மையத்தில் பயிர் செய்வதற்கான புதிய தொழிற்நுட்பம் மற்றும் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அதன் மூலம் ஆண்டுக்கு ஆயிரம் விவசாயிகள் பயன்பெற்று வருவதாகவும் கூறினார் திண்டுக்கல்லில் தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் 500 குழந்தைகளின் படிப்புக்கான செலவை முழுமையாக ஏற்கும் வகையிலான திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் ஆண்டுக்கு ரூ 50 லட்சத்திற்கு குறையாமல் குழந்தைகளின் கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்,
கடலுார் மாவட்டத்தில் உள்ள மூன்று ஒன்றியங்களில் 3000 பெண்கள் இடம் பெற்றுள்ள சுய உதவிக்குழுக்களை அமைத்துள்ளதாகவும் இதுவரை 65 கோடி ரூபாய் அளவுக்கு அவர்களுக்கு கடன் உதவி பெற்றுத்தந்திருப்பதாகவும் தெரிவித்தார், இந்த மையத்தில் பெண்களுக்கு தொழிற்பயிற்சி , கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு இலவச சட்ட ஆலோசனை , அவர்களுக்கு குடும்பநல ஆலோசனை மனநல ஆலோசனை போன்றவை வழங்கப்படுவதாகவும் முதியோருக்கான இல்லமும் அமைக்கப்பட்டுள்ள சேவைகள் செய்து வருவதாக தெரிவித்தார், முதலமைச்சர் வழங்கிய விருது மூலம் தங்களது சேவைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும் சேவை செய்யும் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளதாகவும் நடனசபாபதி கூறினார்,