கோவில்கள் திறப்பு எப்போது

 


கோவில்கள் திறப்பு குறித்து  வரும் 29 ம்தேதி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மருத்துவ நிபுணர்கள் கருத்துக்களின் அடிப்படையில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும்  என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்


கட்டுக்குள் வந்தபின்னர் நீட் தேர்வு


கடலுார் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார் அப்போது செய்தியாளர்களுடன் நடத்திய சந்திப்பில் திருக்கோவில்கள் எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த முதலமைச்சர்,  வரும் 29 ம்தேதி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மருத்துவநிபுணர்களுடன் நடைபெறும் கூட்டங்களில் தெரிவிக்கப்படும் கருத்துக்களின் அடிப்படையில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்


 நீட் தேர்வு குறித்து  அரசின் நிலை குறித்து எழுந்த கேள்விக்கு விடையளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , : கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருக்கின்ற காரணத்தால் மாணவர்கள்
தேர்வு எழுத முடியாத சூழ்நிலை உள்ளது என்றும்  நோய்த்தொற்று 
கட்டுப்பாட்டிற்குள் வந்த பின், நீட் தேர்வை நடத்த வேண்டுமென்று ஜூலை
மாதம் 8ஆம் தேதி   பிரதமருக்கு  கடிதம் எழுதியுள்ளதாக குறிப்பிட்டார், 

பரவல் தெரியவில்லையே


நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில்  பேசிய முதலமைச்சர் கொரோனா நோய்த்தொற்று எவ்வாறு பரவுகிறது என்றே கண்டுபிடிக்க முடியவில்லை பரிசோதனை செய்துதான் கண்டுபிடிக்கிறோம். இந்த நோய் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சிலருக்கு அறிகுறியே தென்படுவதில்லை. என்றும் . இங்கு வரும்பொழுதும் நான்கூட பரிசோதனைசெய்துவிட்டு தான் வந்துள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்திற்குச் செல்லும்போதும்,நானும், என்னுடன் வருபவர்களும் பரிசோதனை மேற்கொண்டு, அதில் நெகடிவ் என்றுவந்தால்தான் வருகிறோம். ஏனென்றால் நம்மூலம் மற்றவர்களுக்கு பரவி விடக்கூடாது.\அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை முழுமையாகபொதுமக்கள் கடைபிடித்தால் இந்த நோய் தொற்றுப் பரவலிலிருந்து அனைவரும்பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார். மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரிந்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் விரைவாக என்று தெரிவித்தார்



முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலைத்தொட்டு வணங்கிய அமைச்சர்களை  கேள்விப்பட்டிருக்கிறோம்,அவருடைய ஹெலிகாப்டர் வானில் வட்டமிடும் போது மேலே பார்த்து கும்பிட்ட அமைச்சர்களை பார்த்திருக்கிறோம், முதன்முதலாக கடலுார் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும்போது  அவர் வந்த காரைத்தொட்டு கும்பிட்டார் ஒரு அமைச்சர் அவர் வேறு யாருமல்ல: தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தான்.