கல்வியாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதித்து, மாற்றுச் செயல்திட்டங்களை வகுப்பதற்காக  நாளை  கல்வியாளர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்த இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் இதற்கான  நிகழ்வில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திருநெல்வேலி மனோன்மணியன் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்   வசந்திதேவி, பேராசிரியர் கருணானந்தம், விஞ்ஞானி ராமானுஜம், பொதுக் கல்விக்கான மாநில மேடை அமைப்பின் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மருத்துவர் எழிலன் ஆகியோர் பங்கேற்க இருப்பதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்  


மேலும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்களின் நலன் காக்கும் வகையில் அனைத்துக்கட்சித்தலைவர்கள் பிறமாநில முதல்வர்களுடன் இணைந்து ஒருங்கிணப்பு முயற்சிகளையும் சட்டப்போராட்டங்களையும் நடத்த இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்