"இந்தி"யா - இந்தியரா தொடரும் சர்ச்சை

 


எச்.ராஜாவின் டுவிட்டர் பதிவை  தொடர்ந்து  "இந்தி"யா , இந்தியரா என்ற பிரச்னை மேலும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது 
அண்மையில்  சென்னை விமானநிலையத்திற்கு சென்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை காவலர் ஒருவர் இந்தி தெரியுமா என்று கேட்டார் அதற்கு தெரியாது என்று பதிலளித்த கனிமொழியிடம்  நீங்கள் இந்தியரா என்று கேள்வி எழுப்பியதாக காவலர் மீது குற்றம் சாட்டியிருந்தார் இதில் கனிமொழிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்திருந்தார் 
இந்த நிலையில்  பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா வெளியிட்ட பதிவில்  கனிமொழிக்கு இந்தி தெரியும் என்றும்  1989 ஆம் ஆண்டு தேவிலால் துணை பிரதமராக இருந்தபோது அவரது இந்தி உரையை கனிமொழி தமிழில்  மொழி பெயர்த்ததாகவும் தெரிவித்துள்ளார், இந்த விவகாரம் தமிழக அரசியலை மேலும்  சூடாக்கியிருக்கிறது, , 
இது குறித்து  ஆவேசமாக பதிலளித்த கனிமொழி  இந்தியில் இருந்து தமிழில் மொழி பெயர்த்ததாக கூறப்படும் தகவலை ஆதாரப்பூர்வமாக நீருபிக்க முடியுமா என்று எச்.ராஜாவை சவாலுக்கு அழைத்துள்ளார், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் முன்னாள் முதல்வர் குமாரசாமி, இது போன்ற சம்பவங்கள் தங்களுக்கும் நேர்ந்துள்ளதாக கூறியிருக்கின்றனர் எனவே தனக்கு இந்தி தெரியுமா தெரியாதா என்பது பிரச்னையல்ல: இந்தி தெரிந்தால் தான் ஒருவர்  இந்தியனா இருக்க முடியும் என்றால் அது அவமானமில்லையா என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,ஒரு மதத்தை தான் பின்பற்ற வேண்டும் என்றும் ஒரு வாழ்க்கை முறையை தான் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்வதெல்லாம் சரியானது தானா  என்று கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பியுள்ளார்