வரும் 10ம்தேதிக்குள் கோயம்பேடு மார்க்கெட்டை திறக்காவிட்டால் தமிழ்நாடு முழுவதும் காய்கறி, பழம் பூ மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர், இதைத்தொடர்ந்து வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, கோயம்பேடு காய்கறி, பூ பழம் மார்க்கெட் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர் ஆகியோர் உள்ளிட்ட 38 சங்க நிர்வாகிகளுடன் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் உறுப்பினர் கார்த்திகேயன் பேச்சுவார்த்தை நடத்தினார்,
தற்போது முதல்வரும் துணை முதல்வரும் சுற்றுப்பயணத்தில் இருப்பதாலும் 12 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை இருப்பதாலும் கடையடைப்பை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டனர், மேலும் முதல்வரும் துணை முதல்வரும் தலைநகர் திரும்பியவுடன் அவர்களுடன் ஆலோசனை நடத்தி வணிக வளரகத்தை திறக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார், அவரது வாக்குறுதியை ஏற்று வரும் 10 ம்தேதி அறிவித்திருந்த காய்கறி,பூ பழம் வியாபாரிகளின் ஒரு நாள் கடையடைப்பை தற்காலிகமாக தள்லிவைப்பது என்ரு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்
கடையடைப்பு வாபஸ்