உனக்கென்ன எத்தனை வரலாறு நீ தடி எடுக்காத பெரியாரு என்று நடிகர் கமல்ஹாசனுக்கு பாடலாசிரியர் சினேகன் பாடல் எழுதி புகழாரம் சூட்டியுள்ளார்
நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது கலையுலக பயணத்தை தொடங்கி 61 ஆண்டுகள் நிறைவடைந்த நாளை அவரது ரசிகர்கள் நேற்று கொண்டாடினர், கமல்ஹாசனின் கலையுலக சேவையின் 61 ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் கவிஞரும் மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அணி செயலாளர் சினேகன் பாடல் ஒன்றை எழுதியுள்ளார், அதில் திரையில் நிகழ்த்திய மாற்றங்கள் இனி தரையில் நிகழ்த்திட வா வா, உனக்கென்ன எத்தனை வரலாறு நீ தடி எடுக்காத பெரியாரு மக்களை நேசிக்கும் தலைவனுக்கே நாளை மகுடம் அணிவிக்க காத்திருக்கே என்று அவருக்கே உரித்தான வார்த்தைகளால் பாடலை வார்த்தைகளால் அலங்கரித்துள்ளார், சினேகன் வெளியிட்ட புகழார பாடலை கேட்டால் இனி வர இருக்கும் கமல் படங்களுக்கு அவர் தவிர மற்றவர்கள் பாடல் எழுத மாட்டார்கள் என்று நம்பலாம்
கேட்டு மகிழுங்கள்:
https://www.youtube.com/watch?
v=3Qa5iD2s838