சாதனைக்கு ஊனம் தடையில்லை

ஐஏஎஸ் தேர்வில் சாதனை படைத்திருக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு  பாராட்டுக்கள் குவிந்த வண்ணமிருக்கின்றன, மதுரை பூரண சுந்தரி, பாலநாகேந்திரன் ஆகியோர் படைத்த சாதனை, வெற்றியை குவிக்க ஊனம் ஒரு தடையல்ல என்பதை மாணவர்களுக்கு உணர்த்தியுள்ளது  


 25 வயதான பூரண சுந்தரி 4 வது முறையாக முயற்சி செய்து  ஐஏஎஸ் தேர்வில் வாகை சூடியுள்ளார், மதுரை பிள்ளைமார் மேல்நிலைப்பள்ளியில் படித்த பூரண சுந்தரி பத்தாம் வகுப்பு தேர்விலும் பிளஸ் 2 தேர்விலும்  மிக அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்,  மதுரை பாத்திமா கல்லுாரியில் பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்து வரும் பூரண சுந்தரி  சாதனைக்கு வாழ்த்துக்கள் குவியும் காரணம் அவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்பதே, , ஐஏஎஸ் உதயசந்திரனும்  சகாயமும் தான் நான் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று  விருப்பத்திற்கே காரணம் என்கிறார் பூரண சுந்தரி,
அதே போல சென்னையை சேர்ந்த பால நாகேந்திரனும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி , தோல்விகள் தான் வெற்றிக்கு அடிப்படை என்ற வார்த்தைகளுக்கு இலக்கணம் வகுத்தது போல்  9 வது முறையாக தேர்வெழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார், 2016 ஆம் ஆண்டில்  சிவில் சர்வீஸ்சில் தேர்ச்சி பெற்ற பாலநாகேந்திரனுக்கு  அப்போது ஐஏஎஸ் கிடைக்கவில்லை என்பதற்காக மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளான இருவருக்கும் சமூக வலைதளங்களில்  பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன, மதுரையை மகிமையை உணர்த்தியிருக்கும் பூரணசுந்தரிக்கும்  முயற்சித்தால் வெற்றி கிடைக்கும் என்றுசரித்திரம் படைத்திருக்கும்   பாலநாகேந்திரனுக்கும்   வாழ்த்து கூறியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவரது சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ,எண்ணித்துணிந்தால் எதுவும் தடையல்ல என்பதற்கு சான்றாக திகழும் இவரது வெற்றி சாதனை படைக்க விரும்புபவர்களுக்கு முன்னுாதாரணமாக திகழும் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்