திமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின் தான் என்று திட்டவட்டமாக சொல்கிறார்கள், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தெளிவாக கூற முடியுமா என்று முன்னாள் அமைச்சர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்,
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் வி.எஸ். விஜய் அண்மையில் திமுகவில் சேர்ந்தார், தான் கட்சியில் சேர்ந்தது குறித்து பேட்டியளித்த டாக்டர் விஜய், திமுகவில் நான் பதவிக்காக சேரவில்லை. பதவிக்கு முந்திக்கொண்டு செல்வதும் நியாயமில்லை, அதிமுகவில் பதவி கொடுக்கவில்லை என்பதற்காக ஓடி வரவில்லை, இன்னும் 4 மாதங்களில் அதிமுகவே என்னவாகும் என்பது தெரியவில்லை. அங்கே ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை. எனவே முதலமைச்சர் வேட்பாளர் குறித்த ஒரு தெளிவான திட்டவட்டமான முடிவை அவர்களால் எடுக்க முடியவில்லை. என்று டாக்டர் விஜய் கூறினார்,
திமுகவை பொறுத்தவரை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று தெளிவுப்பட தெரிவிக்கிறார்கள் ஆனால் அதிமுக தரப்பில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற தீவிரமான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, அந்த சர்ச்சையும் பிரச்னையும் வெடித்துக்கொண்டே இருக்கிறது இன்னும் ஒயவில்லை,என்றார், அவர்