.இன்று தான் உண்மையான சுதந்திர தினம்
சென்னை அடுத்த கும்முடிப்பூண்டியில் ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றவிடாமல் ஊராட்சித்தலைவர் அமிர்தம் அவமதிக்கப்பட்டார் அவரை அவமதித்து கொடியேற்ற விடாமல் தடு்த்த ஊராட்சி உதவியாளர் சசிகுமார் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்,
ஊராட்சி அலுவலகத்தில் திருவள்ளூவர் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆகியோர் முன்னிலையில் நேற்று அமிர்தம் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்,
அப்போது அவர், இ்ன்று தான் எனக்கு உண்மையிலேயே சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்று உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்
என்கவுண்டர்
அயன்புரம் ரவுடி சங்கர் சுட்டுக்கொலை
அயனாவரத்தில் கொலை முயற்சி கஞ்சா வியாபாரம் ஆகியவற்றில் கொடிக்கட்டி பறந்த ரவுடி சங்கரை பிடிக்க காவல்துறை முற்றுகையிட்டபோது காவலர் முபாரக்குக்கு அரிவாள் வெட்டு விழுந்தது, இதைத்தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான காவலர்கள் சங்கர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர், இதில் ரத்த வெள்ளத்தில் சங்கர் விழுந்தார், சங்கரின் அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த காவலர் முபார்க் கீழ்ப்பார்க்ம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்,அவரை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சந்தித்து ஆறுதல் கூறினார்
50 லட்சம் டோஸ்
முன்கள பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று வராமல் தடுக்க 50 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன,
பிரசாந்த் பூஷண் அறிவிப்பு
நீதிபதிகள் குறித்தும் நீதிமன்றங்கள் குறித்த டுவிட்டர் பதிவிட்ட விவகாரத்தில் சட்ட நிபுணர் பிரசாந்த் பூஷ்ண் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார், அவர் மன்னிப்பு கேட்பதற்கு 2 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது, மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று பிரசாந்த் பூஷன் திட்டவட்டமாக அறிவித்து விட்டார், இருந்தாலும் அவர் மன்னிப்பு கேட்பதற்கு இரண்டு நாட்கள் அவகாசம் அளித்த நீதிபதிகள் பெருந்தன்மையானவர்கள்
ஆன்லைன் பாடமே போதும்
ஆன்லைன் வகுப்புகளுக்கு எந்த தடையும் இல்லை: ஆனால் வீட்டுப்பாடங்களும் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3 லட்சம் பேர் குணமடைந்தனர்,
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்து ஆயிரத்து 913 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
முன்னாள் அமைச்சர் கொரோனாவுக்கு பலி
சென்னை சேப்பாக்கம் தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் , ராமநாதபுரத்தில் ஒரு முறை தொழிலாளர் நலத்துறை, அமைச்சராகவும் சிறுசேமிப்புத்துறை துணைத்தலைவராகவம் இருந்த திமுகவின் அதிரடி பேச்சாளர் ரகுமான்கான் கொரோனா தொற்றுக்கு பலியானார்,
புதிய துணைவேந்தர்
டாக்டர் ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழக துணைவேந்தராக சுகுமார் நியமனம்
நுங்கம்பாக்கத்தில் பீதி
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே முகக்கவசம் அணியாமல் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதால் அப்பகுதி மக்கள் கொரோனா நோய் பீதியில் ஆழ்ந்துள்ளனர்,
கம்யூ வரவேற்பு : காங் அதிருப்தி
திருவனந்தபுரம் விமான நிலையத்தை பராமரிக்கும் பணியில் அதானி நிறுவனத்திற்கு அனுமதியளிக்க கூடாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இந்த தீர்மானத்திற்கு அத்தொகுதியின் எம்.பி. சசிதரூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார், திருவனந்தபுரம் விமானநிலையம் முதல் தரமான மாற்ற வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்,
நல்லக்கண்ணுவுக்கு உடல் நலக்குறைவு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்லக்கண்ணுவுக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லை என்றும் அவருக்கு சிறப்பான சிகிச்சையளிக்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார் . பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் ஆகியோரின் உடல் நிலை ,கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்,
தனிமைப்படுத்தல்
இ பாஸ் வாங்கி மாவட்டம் விட்டு மாவட்டம் வருபவர்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது, சளி இருமல் அறிகுறி உள்ளவர்கள் கொரோனா பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுகின்றனர்,
கிரிக்கெட் வீரருக்கு திருமணம்
தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் விஜய்சங்கருக்கு வைஷாலி விஸ்வேஸ்வரனுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது, இதற்கான புகைப்படங்களை விஜயசங்கர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்,
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
ராமதாஸ் வரவேற்பு
மருத்துவ குணம் கொண்ட மூலிகைககளின் சாகுபடிக்கு நூறு நாள் திட்டப் பணியாளர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிவிப்பது பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்தள்ளார் .