இரண்டாவது தலைநகரம் குறித்து மக்கள் நலன் சார்ந்து கோரிக்கை விடுப்பது அமைச்சர்களின் தனி உரிமை என்று என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்
சென்னை திருவிக நகர் மண்டலத்தில் கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை முகாம் மற்றும் காய்ச்சல் தடுப்பு முகாம்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது அவர் செய்தியாளர்களை சந்திக்கையில்
மதுரை, திருச்சி மற்றும் கன்னியாகுமரி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டும் என்று அமைச்சர்கள் வலியுறுத்தி வருவது குறி்தது பதிலளித்த அமைச்சர் உதயகுமார் தலைநகர் விவகாரத்தில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தங்கள் மாவட்ட மக்களின் நலன் கருதி தங்களது கோரிக்கை கூறிவருகின்றனர்.இதில் எந்த தவறும் கிடையாது என்று அவர் குறிப்பிட்டார், . அமைச்சர் என்ற அடிப்படையில் மாவட்ட வளர்ச்சி, மக்கள் நலன், முன்னுரிமை , மாவட்ட தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தங்களது கோரிக்கையை கூறி வருகின்றனர். அது அமைச்சர்களின் தனி உரிமை . என்னை சட்டமன்ற உறுப்பினராக்கிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அமைச்சராகிய என்னுடைய கடமை, அந்த அடிப்படையில நான் என்னுடைய கோரிக்கை அரசிடம் வைத்துள்ளேன்.என்றும் இது குறித்து முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு உரிய முடிவுஎடுப்பார்கள்என்று அமைச்சர் உதயகுமார் நம்பிக்கை தெரிவித்தார்