முதலமைச்சர் எடப்பாடி .கே.பழனிசாமி
இன்று திருவாரூரிலிருந்து கார் மூலமாக தஞ்சாவூர்
மாவட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தார். திருவாரூர் மாவட்டம்,
கோவில்வென்னி ஆதனூர் கிராமம் என்ற இடத்தில் வயல்காட்டில் 15
பெண்கள் களை பறித்துக்கொண்டிருந்ததை அறிந்த முதலமைச்சர்
திடீரென காரை நிறுத்தினார்
வயல்காட்டிற்கு சென்று களையெடுத்து கொண்டிருந்த அப்பெண்களிடம் உரையாடினார்.
களை எடுத்த பெண்கள் முகக்கவசம் இல்லாமல் இருந்ததை அறிந்த
முதலமைச்சர் தனது வாகனத்தில் வைத்திருந்த முகக்கவசத்தை
அனைவருக்கும் வழங்கினார். அப்போது, அரசு மூலமாக அறிவிக்கப்பட்ட
அனைத்து நிவாரண உதவிகளும் தங்களுக்கு கிடைத்துள்ளதா என்றும்,
கடந்த ஐந்து மாதங்களாக விலையில்லாமல் அரிசி, பருப்பு, எண்ணெய்,
சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது கிடைக்கப்பெற்றதா என்றும்
கேட்டறிந்தார். வயல்காட்டில் பணிபுரியும் உங்களுக்கு நியாயமான கூலி
கிடைக்கிறதா என்றும் அனைத்து நாட்களும் நீங்கள் விவசாய பணிக்கு
செல்கிறீர்களா என்றும் கேட்டறிந்தார்.