பிரார்த்தனை பலிக்கிறது: எஸ்.பி.பி குணமடைகிறார்

செய்திகள் வாசிப்பது .., 


*பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யிந் உடல் நிலை சீராக இருக்கிறது என்று அவருக்கு சிகிச்சையளித்த நுங்கம்பாக்கம் எம்ஜிஎம் மருத்துவமனை  அறிவித்துள்ளது, இதனால் அவருக்காக பிரார்த்தனை நடத்திய திரையுலக பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்,


 


*அகில இந்திய தலைவராக சோனியாகாந்தியும் செயல்தலைவராக ராகுல்காந்தியும் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ்  இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்


*பாஜகவுடன் கூட்டு வைத்துள்ளதாக காங். மூத்த தலைவர்கள் மீது ராகுல் புகார் கூறியதாக தகவல் வெளியானது இதைத்தொடர்ந்து ராகுல் குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டார் மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல். அவரிடம் நேரில் விளக்கம் அளித்த பின்னர் தனது பதிவை கபில் சிபல் நீக்கி விட்டார், 


*கேரள சட்டப் பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான  அரசின் மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது, இது ஒருபக்கமிருக்க திருவனந்தபுரம் விமானநிலையத்தை தனியார் மயமாக்க எதிர்த்து அம்மாநில அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது,


 


*தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் பட்டப்படிப்பு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புகளுக்கு ), இன்று \முதல் செப்டம்பா் 28-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் .என்று அறிவிக்கப்பட்டுள்ளது,


 


 


*ஐஏஎஸ் தேர்வில் சாதனை படைத்த மதுரை மாணவி பூரணசுந்தரி, சென்னையை சேர்ந்த நாகேந்திரன் ஆகிய பார்வையற்ற மாணவர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோட்டைக்கு வரவழைத்து பாராட்டி தெரிவித்ததோடு, நினைவு பரிசும் வழங்கினார்,


 


* 80ஆவது அகவை காணும் பெரம்பலுார் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  


* வணிகர் சங்கங்களின் பேரமைப்புத்தலைவர் விக்கிரமராஜா தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்தார் அப்போது அவர் கோயம்பேடு சந்தையை திறக்க முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்தார், ஏற்கனவே சந்தையை திறக்காவிட்டால், தமிழ்நாட்டில்  பழம் பூ மார்க்கெட் வியாபாரிகள் கடைகள் அடைத்து போராட்டம் நடத்துவோம் என்று விக்கிரமராஜா அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,  இந்த நிலையில் கோயம்பேடு சந்தையை மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பூக்கள் பழங்கள் இறைச்சி சந்தைகள் மற்றும் வாரச்சந்தைகளையும்  துரிதமாக திறப்பதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்   .


*நாளை பிறந்தநாள் காணும தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து 


*தனது நெருக்கமான நண்பர் அருண் ஜேட்லியை இழந்து பெரிதும் தவிப்பதாக, பிரதமர் மோடி டிவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.