தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டங்கள் செல்ல வழங்கப்படும் இ பாஸ் முறை தொடர்ந்து நீடிக்கும் என்று தமிழக தலைமை செயலாளர் சண்முகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்
தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ பாஸ் வழங்கப்படுவதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன, இறப்பு , திருமணம் மருத்துவ அவசர காலத்திற்கு வழங்கப்படுவதாக கூறப்படும் இ பாஸ் விண்ணப்பித்தோருக்கு கிடைப்பதே இல்லை என்றும் இதனால் உறவினர் இறப்புக்காக போக முடிவதில்லை.என்றும் தொலைதுாரத்திலிருந்தே மக்கள் கதறியழுகிறார்கள் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார் . இதில் மத்திய அரசு தளர்வு வழங்க கூறியும் மாநில அரசு அனுமதிக்காதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார், பத்து முறை விண்ணப்பித்தும் கிடைக்காத இ பாஸ் பணம் கொடுத்தால் தான் கிடைக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதி வேதனைப்பட்டிருந்தார் இந்த நிலையில் தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் முருகன் உள்ளிட்ட அரசியல்கட்சியினர் இ பாஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்
இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை செயலாளர் க.சண்முகம், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ பாஸ் அவசியம் என்றும் இ பாஸ் வழங்குவது தொடர்பாக உள்ள குறைபாடுகள் களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார், இ பாஸ் முறையை எளிமைப்படுத்த மாவட்டந்தோறும் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்து தானே நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்,