சென்னை விமானநிலையத்தில் நீங்கள் இந்தியர் தானா என்று கனிமொழியிடம் பெண் காவலர் கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி விமான நிலையத்திற்கு வந்தபோது பாதுகாப்புக்கு அங்கிருந்த மத்திய தொழிற்படை வீரர் சோதனை மற்றும் பாதுகாப்பு குறித்து இந்தியில் கேட்டபோது, கனிமொழி தனக்கு இந்தி தெரியாது என்றும் ஆங்கிலம் மற்றும் தமிழ்தான் தெரியும் என்று கூறியுள்ளார்.அதற்கு வீரர் மீண்டும் நீங்கள் இந்தியர் தானா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தை சுட்டி காண்பித்து ட்வீட் செய்துள்ள கனிமொழி இந்தி தெரிந்தால் தான் இந்தியரா ? இந்தி தெரிந்தால் தான் இந்தியர்களா என்ற முடிவுக்கு எப்போது வந்தீர்கள் என பதிவிட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட்டாகி உள்ளது, கனிமொழியின் ட்வீட்டுக்கு ஆதரவு குவிந்து வருகிறது, புதிய கல்விக்கொள்கையில் முன்றாவது மொழியை தேசிய கல்விக்கொள்கையில் பரிந்துரைக்கும் நிலையில் கனிமொழியின் பதிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.,