பொதுசெயலாளர் துரைமுருகன்

 


*திமுக பொதுசெயலாளராக  இருந்த அன்பழகனுக்கு பதிலாக புதிய பொதுசெயலாளரை தேர்ந்தெடுக்க கடந்த மார்ச் மாதம் 29 ம்தேதி அக்கட்சியின் பொதுக்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது,.  அந்த பொதுக்குழுவில் புதிய பொதுசெயலாளராக  துரைமுருகன் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில்  கொரோனா நோய்த்தொற்று ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுக்குழு  தள்ளி வைக்கப்பட்டது, இந்த நிலையில்  வரும்  9ம்தேதி திமுக வரலாற்றிலேயே முதன்முதலாக காணொளி காட்சி மூலம்  பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது, முதன்முதலாக காணொளிக்காட்சி மூலம்   திமுக பொதுசெயலாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, பொருளாளராக டி.ஆர். பாலுவும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்  இதற்கான மனுத்தாக்கல் நாளை நடைபெறும் என்றும் மனுக்கள் பரிசீலனை நாளை மறுநாளும்  திரும்ப பெறும் வைபவங்கள் அடுத்தடுத்து நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது  அதற்காக  திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை  தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது,   


*சென்னை மாநகராட்சி  மற்றும் ஐசிஎம்ஆர் என்றழைக்கப்படும் இந்திய தொற்று நோய் ஆராய்ச்சிக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன,  மாநகரில்  உள்ள 51 வார்டுகளில் 10 வயுது முதல் 60 வயது வரை  உள்ள 12 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில்   சென்னையில் 5 பேரில் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் , எதிர்காலத்தில் 80 சதவீதம் பேருக்கு அதாவது  17 லட்சம் பேருக்கு நோய்த்தொற்று எளிதில் ஏற்பட வாய்ப்புகள்  இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது,


 


*சென்னையில் மாநகர பேருந்துகள்  இனி இரவு 9 மணி ஓடும் என்றும்  பஸ் கட்டணம் உயராது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார் 
தமிழகத்தில் 3 ஆயிரத்து 785 நுாலகங்கள் திறக்கப்பட்டன,   அனைத்து நுாலகங்களில் போட்டித்தேர்வு எழுதும் மாணவர்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சென்று படிக்கலாம, 
அரசு பள்ளிகளில்  10 லட்சம் மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் சேர்ந்துள்ளனர், பள்ளிகள் திறப்பு குறித்து யோசிக்கும் நிலையில் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார், 
சென்னை திநகர் திமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இன்று காலை முதல்  மூன்று பகுதிகளாக மக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தான தலைவர் சேகர் அறிவித்துள்ளார்
*கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தகரம் அடிக்கும் முறை ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் அறிவித்தள்ளார்,



*161 நாட்களுக்கு பின்னர் சென்னையில் நேற்று  மாநகர பேருந்துகள் பெரும்பாலும்  இயக்கப்பட்டன, பேருந்துகளில் நடத்துநர் இருக்கைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த  சானிஸைடர்களால் பயணிகள்தங்களது  கைகளை துாய்மைப்படுத்தி கொண்டு முகக்கவசங்களுடன்  பயணம் செய்தனர்  எனினும்  பெரும்பாலான பேருந்துகளில்  கொரோனா நோய்த்தொற்று   பீதியால் பயணிகள் கூட்டம் மிகக்குறைவாகவே இருந்தது  இதில் மாநகர மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி கடந்த மார்ச் பெற்ற மாதாந்திர பஸ் பாஸை செப்டம்பர் 15 ம்தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் என்பது தான் 


*சென்னை சந்தோம் நெடுஞ்சாலையில்  தமிழ்நாடு இசைக்கல்லுாரியில் நடத்தப்படும் படிப்புகளுக்கு மாணவர்கள்  இணையவழியில் விண்ணப்பிக்க வரும் 7 ம்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,  


*தலை சிறந்த சொற்பொழிவாளர் மாற்றாரையும் போற்றும் சிறந்த பாராளுமன்ற வாதி, , இலக்கிய வாதி, ஓவியர் என்று போற்றப்பட்ட மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல், துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன்  தகனம் செய்யப்பட்டது,  .பிரதமர் மோடி,  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,  டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்,  ஆகியோர் கலந்துகொண்டு  இறுதி அஞ்சலி செலுத்தினர்,


*வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வெளியூர் பக்தர்கள் வருவதற்கு வரும் 8 ம்தேதி வரை தடை விதித்து நாகப்பட்டினம் ஆட்சியர் பிரவீன் பி.நாயர் உத்தரவிட்டுள்ளார்  


* கல்லுாரி மாணவர்களுக்கான இறுதிப்பருவத்தேர்வு வரும் செப்டம்பர் 15ம்தேதிக்கு பின்னர் நடைபெறும் என்றும்  தேர்வுக்கு மாணவர்கள் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவுறுத்தியுள்ளார் 


 


*சென்னை மாநகராட்சி கருத்தாய்வை தொடர்ந்து  தமிழக பாரதிய ஜனதாகட்சி  சர்வே நடத்தியுள்ளதாக  அக்கட்சியின் மாநிலத்தலைவர் முருகன் தெரிவித்துள்ளார், அதில்  தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டாலே அறுபது சட்டமன்றத்தொகுதிகளில் தங்களுக்கு வெற்றி பெற வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக  திடுக்கிடும் தகவல் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்  மூன்று நாட்களாக அவர் கூறி வரும் ஆய்வு முடிவுகள் அதிமுக அமைச்சர்கள் கண்டுகொள்வதாக தெரியவில்லை, 


*ஆண்ட்ராய்டு செல்போன் மூலமாக ஆன்லைன் பாடம் படிப்பதில் சகோதரிகளுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால் நித்யஸ்ரீ என்ற மாணவி நஞ்சருந்தித் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு நெஞ்சைக் கனக்க வைக்கிறது; பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்திக் கொள்வதாக ஆன்லைன் வகுப்புகளைத் தரப்படுத்தி, சமவாய்ப்பை ஏற்படுத்திவிட்டு நடத்துங்கள்-  என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்