சித்துாரு சிறுக்கி அருவா சண்டை படத்திற்காக கவிபேரரசு வைரமுத்து எழுதிய குத்தாட்ட பாடல் தியேட்டர்கள் திறக்கும் போது அதிர வைக்கும் என்கிறார் தயாரிப்பாளர் ராஜா
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் வி..ராஜா தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள படம்தான் " அருவா சண்ட " கதாநாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். இந்த படத்தின் .கதை, திரைக்கதை, வசனம், டைரக்சனை - ஆதிராஜன் மேற்கொண்டுள்ளார்,
கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில், தரண் இசையில், இந்த படத்தில் இடம்பெறும் இரண்டாவது வீடியோ பாடலான " இவ சித்தூரு சிறுக்கி செக்ஸான கிறுக்கி " என்னும் கலகலப்பான குத்து பாடலை தயாரிப்பாளர் வி. .ராஜா வெளியிட்டுள்ளார்.
பட்டி தொட்டியெங்கும் தற்போது பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் இந்த பாடலுக்கு தீனா நடனம் அமைத்துள்ளார், எம் பேரு மீனா குமாரி என்ற ஹிட் பாடலை பாடிய அனிதா இந்த பாடலை தனது கிக்கேற்றும் குரலில் பாடி அசத்தியிருக்கிறார். திரையரங்குகள் திறந்த பிறகு இந்த படமும் பாடலும் தான் தியேட்டரை அதிர வைக்கும் என்கிறா் தயாரிப்பாளர்.ராஜா.
இந்த படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகவும் சுப்ரா கோஷ் தனது நளினமான நடன அசைவுகளில் ரசிகர்களை வியக்க வைக்கும் அளவிற்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
கபடி, கௌரவக் கொலை பின்னணியில் உருவாக்கப் பட்டிருக்கும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மனசாட்சி உள்ளவர்களின் இதயங்களை உலுக்கி எடுக்கும். சாதியப் பிரச்சனைகளுக்கு சவுக்கடி கொடுக்கும் இப்படம் தணிக்கை அதிகாரிகளால் பெரிதும் பாராட்டப்பட்டு " யூ " சான்றிதழ் பெற்றுள்ளது.