நாயகன், நாயகி இருவரும் தேனிலவுக்கு மலை பிரதேசத்தில் தங்களுக்கு சொந்தமான 10 ஏக்கரில் உள்ள திருமண வசந்தத்தை கழிக்க தங்களது வசந்த மாளிகைக்கு செல்கிறார்கள். அங்கே போனபோது தான் அது வசந்த மாளிகை அல்ல: மர்மமாளிகை என்று தெரிகிறது, திடுக்கிட வைக்கும் அந்த மாளிகையில் 40 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு உண்மை கதையை ஒரு பேய் சோகம் சொட்ட சொட்ட சொல்கிறது அந்த சம்பவத்திற்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் திரைக்கதை.
முதல் பாதி முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாகவும், இரண்டாவது பாதி காதல் கலந்த ஹாரராகவும் இருக்கும். வழக்கமான பேய் படங்களை போல் இல்லாமல் ஒரு வித்யாசமான முயற்சியை இந்த படத்தில் கையாண்டிருக்கிறார்கள். அது படம் வெளியான பிறகு மக்களிடையே பெரிய வரவேற்பைபெரும். முதன் முறையாக ரியாஸ்கான் இந்த படத்தில் பக்கா காமெடியனாக நடித்துள்ளார்.
முழுக்க முழுக்க மாளிகைக்குள்ளே நடக்கும் இந்த படத்திற்கு மாயமாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது காமெடி, காதல், கலந்த ஹாரர் படம் " மாய மாளிகையை கே.என், .பைஜூ இயக்கி கதா நாயகனாக நடிக்கிறார் நாயகிகளாக இரண்டு புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ்கான், கேசவ தேவ், கஞ்சா கருப்பு, சம்பத்ராம், முத்துக்காளை ஆகியோர் நடித்துள்ளனர். மற்றும் இவர்களுடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்