10 ஆயிரம் காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பம்

காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கான ஆள்சேர்ப்பு எழுத்துத்தேர்வு வரும் டிசம்பர் மாதம் 13ம்தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணிவரும் 26ம்தேதி முதல்  www.tnusrbonline.org என்ற இணையதளம் வழியாக தொடங்குகிறது விண்ணப்பங்கள் அனுப்ப அக்டோபர் மாதம் 26ம்தேதி கடைசி நாளாகும் ஆயுத படையின் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களில் காலியாக உள்ள 3099 பெண்கள் மற்றும் திருநங்கையர்  685ஆண்‌ காவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் அதே போல் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களில்  6545 ஆண் காவலர்களும் இத்தேர்வு மூலம் நியமிக்கப்படுகின்றனர் 119 இரண்டாம் நிலை சிறைகாவலர் மற்றும் 458 தீயணைப்பாளர் பணியிடங்களுக்கும் இத்தேர்வு நடைபெறுகிறது


எழுத்துத்தேர்வு மட்டுமின்றி  1500 மீட்டர் தூரத்தை 7நிமிடங்களுக்குள் ஒடும் ஆண்களுக்கான ஓட்ட பந்தயம். 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடம்  30வினாடிகளில் ஓடிமுடிக்கும் பெண்களுக்கான போட்டி கயிறு எறிதல் நீளம் தாண்டுதல் கிரிக்கெட் பந்து எறிதல் உடற்தகுதி தேர்வு உள்ளிட்ட தேர்வுகளும் உண்டு சான்றிதழ்கள் சரி பார்த்தலோடு  தேர்வில் பங்கேற்போரின் கடந்த கால நடவடிக்கைகளும் ஆய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது  குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் 18 வயதில் இருந்து 24வயதுக்கு மேற்படாதவர் தேர்வாணையத்தின் தேர்வில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது