வேடிக்கை பார்க்கக் கூடாது சூரியா ஆவேசம்

* அப்பாவி மாணவர்களின் மரணங்களை நாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்் கூடாது என்று நடிகர் சூரியா ஆவேச அறிக்கை வெளியிட்டுள்ளார்தேர்வெழுத போகும் மாணவர்களுக்குப் வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதை போல அவலம்  எதுவுமில்லை நமது பிள்ளைகளின் தகுதியையும் திறமையையும் தேர்வுகள் தீர்மானிக்க கூடாது மாணவர்களின் நிதர்சனம் தெரியாதவர்கள் கல்விக்கொள்கையை வகுக்கிறார்கள் என்று நடிகர் சூரியா சாடியுள்ளார் முழு அறிக்கையின் மேலே


அரியலூர் அனிதா முதல் மதுரை ஜோதிதுர்கா என்று ஏராளமான மாணவமாணவியரை பலிவாங்கிய நீீீீட் தேர்வு இன்றுபகல் 2 மணிக்கு தொடங்கியது 154 நகரங்களில் , 3842 மையங்களில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 மாணவர்கள் நீட் தேர்வை எழுதி வருகின்றனர்.தமிழ்நாட்டில் 1 லட்சத்து 17ஆயிரத்து 499 மாணவர்கள் எழுதுகின்றனர், தமிழ் உள்ளிட்ட 11 மொழிகளில் இந்த தேர்வு நடைபெறுகிறது, தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி கொண்டிருக்கிறார்கள், இன்னொரு பக்கம் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கமும் வாலிபர் சங்கமும் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஆங்காங்கே போராட்டத்தில் இறங்கியுள்ளனர்,  பகல் 2 மணிக்கு தேர்வு நடத்தப்படும் நிலையில் காலையிலேயே மாணவர்களுக்கான சோதனைகள் தொடங்கி விட்டன, மாணவர்கள் உணவு எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது,


ஒருபக்கம் நீட் எதிர்ப்பு போராட்ட ம் இன்னொருபக்கம் தேர்வெழுத வரும் மாணவர்களுக்கும் உதவுகிறார்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்


வெளியூரில் இருந்து சேலத்திற்கு தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு உதவிட சேலம் புதியபஸ்நிலையம் பகுதியில் 5இடங்களில்  வாலிபர் சங்கத்தினர் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.அதிகாலை 5மணிக்கே முகக்கவசம், கையுறை வழங்குதல், வாகன வசதி ஏற்பாடு செய்தல், வழிகாட்டுதல், பிரஷ் செய்துகொள்ள ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்... இந்த இளைஞர்கள்.வாலிபர் சங்கத்தின் சேவைக்கு பாராட்டு குவிந்த வண்ணம் இருக்கின்றது


 


*சட்டவிரோதமாக சிங்கப்பூரில் உள்ள சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் பங்குகளை  வாங்கியதால் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 89.19 கோடி மதிப்புள்ள  சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது, ரிசர்வ் வங்கி அனுமதியில்லாமல் அந்நியமுதலீடு செய்ததால் அமலாக்கப்பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது 


*உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார் அவர் அங்கு 2 வாரங்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்றும் ராகுல் காந்தி அடுத்தவாரம் நாடு திரும்புவார் என்றும் தெரிகிறது.  ,