அடிச்சு கேட்டாலும் சொல்ல மாட்டேன் அமைச்சர் அதிரடி

அடிச்சு  கேட்டாலும் சொல்லமாட்டேன் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார் சென்னை திருவொற்றியூர் மாநகராட்சி மண்டலத்தில் கொரானோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அதிமுக வேட்பாளர் குறித்து கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த அமைச்சர் தலைமை 144 தடையுத்தரவு போட்டிருக்கு உங்களுக்கு தெரியுமா நான் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் அதற்கு கட்டுப்பட்டால் தான்  இருக்க முடியும் லட்சுமணன் கிழித்த கோட்டை தாண்ட முடியாது என்றார்


அவர்மேலும் கூறுகையில்நேற்றைய தினம் கூட அதிமுக கூட்டத்திற்கு பின்னர் மைக்கை நீட்டி நீட்டி பார்த்தீர்கள்அதிமுக கட்டுப்பாடு உள்ள 50ஆண்டுகள் பாரம்பரியம் உள்ள கட்சி.நீங்க அடிச்சு கேட்டாலும் கூட்டத்தில் நடந்ததை வெளியே சொல்ல மாட்டோம் என்று கூறினார் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுக பாமக போன்ற கட்சிகள் ஒவ்வொரு கருத்துக்களை கூறுவது பற்றி கேட்டபோது கருத்து சொல்வதெற்கெல்லாம் தடையுத்தரவு போடமுடியாது கூத்து சொல்லக்கூடாது என்றெல்லாம் அவர்களுடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் உண்டு அந்த கருத்துக்களை விருப்பங்களை சொல்கின்றார்கள் அதற்கெல்லாம் தடை போடமுடியாது என்றார் அமைச்சர் உதயகுமார்