சட்டசபை தேர்தல் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பரீட்சை என்றும் அந்த பரீட்சை க்காக படித்துக்கொண்டே இருக்கிறோம் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார் திரு.வி.க.நகர் மண்டலம் அயனாவரத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
சட்டசபை தேர்தல் என்பது 5 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பரீட்சை. அதற்காக நாங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கிறோம். மக்கள் மனதை, தேவையை படிக்கின்றோம். சேவை செய்கின்றோம். எனவே நன்றாக படித்த மாணவர்களான எங்களுக்கு தேர்வு பயம் கிடையாது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எங்களுக்கு நன்றாக பாடம் கற்றுக் சொல்லிக் கொடுத்துள்ளார்.
தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள அதிமுக தயாராக இருக்கிறது என்று வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்