நாளைஅனைத்து கட்சி கூட்டம்

விவசாயம் சார்ந்த  மத்திய அரசின் மசோதாக்களுக்கு எதிராக போராட்டம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தை நாளை அறிவாலயத்தில்  திமுக கூட்டுகிறது


விவசாயம் சார்ந்த மூன்று மசோதாக்களை மத்திய அரசு அண்மையில் பாராளுமன்ற த்தில் தாக்கல் செய்தது . இதற்கு எதிராக பஞ்சாப்பில் முதல் குரல் எழுந்தது அம் மாநிலத்தை சேர்ந்த அகாலி தளத்தின் மத்திய அமைச்சர் தனது பதவியை தூக்கி எறிந்தார் விவசாய மசோதாக்களுக்கு எதிராக போராட்டம் கொழுந்து விட்டு எரியத்தொடங்கியுள்ளது.ரயில் மறியல் போராட்டமும் தேசிய அளவில்பந்த் போராட்டமும் நடத்த விவசாய அமைப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன 


இந்த நிலையில் திமுக தலைமையில் நாளை  காலை அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  நடைபெறும் இந்த கூட்டத்தில் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் அறிவிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது


இதற்கிடையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் மத்திய அரசின்  மசோதாக்கள் ஸவிவசாயிகளுக்கு நன்மை பயக்கக் கூடியவை என்றும் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்க உத்தரவாதம் அளிப்பவை என்றும் இம்மசோதாக்களை வைத்து அரசியல் நடத்த முயற்சிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்