மாநிலம் முழுவதும் இன்று பொதுபோக்குவரத்து விறுவிறுப்பாக தொடங்கியது
செப்டம்பர்1ம்தேதி முதல் மாவட்டங்களுக்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டது இன்று முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகளை இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது இதையொட்டி அதிகாலை 2 மணி முதல் கண்ணசராமல பேருந்துகளை கவனமாக ஓட்டும் படி ஓட்டுனர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது பேருந்துகளோடு மெட்ரோ ரயிலும் இன்று இயங்கத்துவங்கியது.சென்னையில் மெட்ரோ ரயில் பயணத்தைஹ தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் துவக்கி வைத்தார்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 8ம்தேதி செவ்வாய் கிழமை தோறும் நடத்திவீடுகள் தோறும் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி மாணவர் அணி செயலாளர் எழிலரசன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்
ஆன் லைன் கல்வியை கட்டாயப்படுத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் தாமஸ் அறிவித்துள்ளார்
விஜயவாடாவில் இருந்துஐதராபாத் சென்ற ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கார் விபத்தில் சிக்கியது மாடு ஒன்று காரை குறுக்கிட அடுத்தடுத்து நாயுடுவுடன் வந்த கார்கள் ஒன்றுடன் ஒன்றுமோதிக்கொண்டனஇதில் நாயுடு காயமின்றி உயிர் தப்பினார்
வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புதிய தொழில்கொள்கையை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்பவர் வெளியிடுகிறார்.
பச்சையப்பன் கல்லூரி முன்னாள் பேராசிரியர் மா.பா அரசு காலமானார் அவரது மறைவுக்கு தமிழறிஞர்கள் பேராசிரியர்கள் பல்வேறு தமிழ் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்
ஆந்திர மாநிலத்தில் மோட்டார் பைக் ஆம்புலன்ஸ் சேவையை நடிகை ரோஜா தொடங்கி வைத்தார்