கலைவாணர் அரங்கில் சட்டமன்றம்


ஐந்து மாதங்களுக்கு பின்னர் சென்னை வீதிகளில் பேருந்துகள் ஓட்டம் தொடங்கியது . அரசு வழிகாட்டுநெறிமுறைகளின்படி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியோடு மாநகர பேருந்துகளில் பயணிக்கின்றனர், சென்னை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 750 வழித்தடங்களில் 3200 பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது 


* குணசேகரன் , ஹசீப் மற்றும் செந்திலை தொடர்ந்து  விவாத ஒருங்கிணைப்பாளர் ஜீவசகாப்தனும் நியூஸ் 18 தொலைக்காட்சியை விட்டு வெளியேறியுள்ளார் 
* தீபாவளி திருநாளுக்குள் கொரோனா எனும் கொடிய நரகாசுரன் நம்மை விட்டு விலகக்கூடும் என்று  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தான் கூறியுள்ளார்,
*சென்னையில்  ஊரடங்கு தளர்வால் மக்கள் மகிழ்ச்சி. ஆலந்துார் பல்லாவரம் குரோம்பேட்டை பகுதிகள்  போக்குவரத்து கடு்ம் நெரிசலில் சிக்கித்தவிக்கிறது, 
சென்னை துரைப்பாக்கத்தில் இருந்து கண்ணகி நகர் போலீசாரால்  விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ராஜேந்திரன் என்பவர்  வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், போலீசார் ஏற்படுத்திய  மனஉளைச்சல் காரணமாகவே  அவர் துாக்குப்போட்டு கொண்ட புகார் எழுந்துள்ளது, 


*திருப்பத்துார் மாவட்ட காவல்துறை வாரம் ஒரு சிறந்த காவலர் என்ற விருதை வழங்க தொடங்கியுள்ளது, இந்த வார விருது,  வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தை சேர்ந்த திங்களன் என்ற காவலரு்ககு வழங்கப்பட்டுள்ளது,


*தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் கொரோனா நோயாளிகள் நலம் பெறுவதற்காக  பிளாஸ்மா தானம் செய்கின்றனர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் இன்று காலை நடைபெறும்  இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பங்கேற்கிறார், 


மொழிப்போர் தியாகி பத்திரிகையாளர்


துரைக்கண்ணு மறைவு


*தினமணி, தினமணிக்கதிர் போன்ற பத்திரிகைகளில் உதவியாசிரியராகவும் சன் நியூஸ் தொலைக்காட்சியில் உதவியாசிரியராகவும் பணியாற்றிய துரைக்கண்ணு நேற்று காலமானார். கோவையில் இந்தி திணிப்புக்கு எதிராக தலைமை தாங்கி போராட்டம் நடத்திய துரைக்கண்ணுவின் உடல் இன்று அதே மாவட்டத்தில்  அடக்கம் செய்யப்படுகிறது,  சிறந்த மொழிபெயர்ப்பு ஆசிரியரான துரைக்கண்ணுவின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை பத்திரிகையாளர் சங்கம் பிரஸ் கிளப், உள்ளிட்ட பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளனர், 


*கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட கடும் வருவாய் இழப்பால் வடசென்னையின் அடையாளமாக கருதப்பட்ட முதல்  70 எம்எம் திரையரங்கம் அகஸ்தியா தியேட்டர்  நிரந்தரமாக மூடப்படுகிறது, இந்த தியேட்டர், 1967 ஆம் ஆண்டு 1004  இருக்கைகளுடன் திறக்கப்பட்டது, மூன்று மாதங்களுக்கு முன்னர் இதே பகுதியில் உள்ள மகாராணி தியேட்டர் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது, , 


கமல்ஹாசன்


தளர்வுகளைத் தொடர்ந்து நாம் வெளி வரும் போது, நம் உயிருக்கும் உறவுகளுக்கும் நம் அலட்சியம் ஆபத்தாகி விடக்கூடாது. மருந்தே இல்லாத இந்நோயில் இருந்து, நம் வாழ்முறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே, நமைக் காத்திடும்.



*கொராேனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டபட்ட கோவில்கள் திறக்கப்பட்டுள்ளது,. சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து  கோவில்களில்  தரிசனம் செய்ய வேண்டும் என்றஅரசு வழிகாட்டுநெறிமுறைகளுடன்  கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ,இதன் காரணமாக  திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி திருக்கோவில் நடைதிறக்கப்படும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன, 


ஐந்து மாதங்களுக்கு பின்னர் அரோகரா


*ஐந்து மாதங்களாக மூட கிடந்த வழிப்பாட்டு தலங்கள் இன்று திறக்கப்பட்டனர், பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் அரோகரா முழக்கத்துடன் முருகனை பக்தர்கள் வழிபட்டனர்,முன்னதாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், 


14 ம்தேதி கூடுகிறது சட்டபேரவை


தமிழக சட்டபேரவை கூடடம் வரும் 14 ம்தேதி காலை  சென்னை கலைவாணர் அரங்கின் மூன்றாவது தளத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெறும் என்று சட்டபேரவை செயலாளர்  சீனிவாசன் அறிவித்துள்ளார், இந்த கூட்டம் வரும் 14 ம்தேதி முதல் 17 ம்தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற வாய்ப்பிருக்கிறது, அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஆறுமாதங்களுக்கு  பேரவை நடைபெற வேண்டும் என்பதும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் நடைபெற வேண்டும் என்பதும் விதிமுறை, ஆனால்கொரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக போதிய இடைவெளி தற்போதைய சட்டமன்றத்தில் இல்லையென்பதால் கலைவாணர் அரங்கம் அதற்கு தகுந்த இடமாக பார்க்கப்பட்டுள்ளது அதனால் அங்கு அந்த கூட்டம் நடைபெறுகிறது, எதிர்காலத்தில் சட்டமன்றம் என்பது போதிய இடைவெளியோடு நடைபெற வேண்டு்ம என்பது தான் முக்கியத்துவம் வாய்ந்த செய்தி:  அதற்கு தகுந்த இடமாக கலைவாணர் அரங்கம் தேர்வு செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதே நமக்கு தெரியவரும் செய்தி, கலைவாணர் பெயரிலேயே சட்டமன்றம் அமையட்டுமே