ஜெயகுமாரை அமைச்சர் ஆக்கியது யார் ?

என்னை அமைச்சர் ஆக்கியது சசிகலா அல்ல ஜெயலலிதா தான் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலளித்துள்ளார்


மீன்வளத்துறை மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான ஜெயகுமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் அங்கன்வாடி கட்டிடம் ஒன்றை திறந்து வைத்தார் அப்போது அவரிடம் .சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தால் அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம்  ஏற்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் ஆக்கியதும் உங்களை போன்றவர்களை அமைச்சர் ஆக்கியதும் சசிகலா தான் என்று  தேமுதிக  பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது பற்றி காரசாரமான கேள்விகளை செய்தியாளர் கள்ள எழுப்பினர்.அதற்கு விடையளித்த அமைச்சர் ஜெயகுமார்.முழுமையான வரலாறு தெரியாமல் பிரேமலதா பேசுகிறார் அவருடைய கட்சி விவகாரங்கள் பற்றி பிரேமலதா பேசலாம் அதிமுக குறித்து பேசுவது ஆரோக்கியமானதல்ல என்றும் தெரிவித்தார். மேலும் தன்னை அமைச்சர் ஆக்கியது சசிகலா அல்ல என்றும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தான் என்றும் கூறினார்.எடப்பாடி பழனிச்சாமியையும் சசிகலா முதலமைச்சர் ஆக்கவில்லை . அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கையெழுத்து போட்டு முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் அமைச்சர் ஜெயகுமார் குறிப்பிட்டார்.


முன்னதாக அருகில் உள்ள மசூதியொன்றில் பாங்கு ஒலி கேட்டது  உடனடியாக அமைச்சர் ஜெயகுமார் தானும் தொழுகையில் ஈடுபட்டார்.இதனால் அந்த பகுதி சற்று நேரம் அமைதியில் ஆழ்ந்தது 


செக்கோஸ்லாவியா நாட்டில் கொரோனா தாண்டவத்தை தொடர்ந்து அந்நாட்டு எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று சுகாதார துறை அமைச்சர் ஆடம் வோஜ்டெக் தனது பதவியை ராஜினாமாஔ செய்தார்


திமுக பெண் சட்டமன்ற உறுப்பினர் சீதாபதிஅவரது கணவர் சொக்கலிங்கம் ஆகியோருக்கு கொரோனா நோயால் தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன


மும்மொழி திட்டத்தில் தமிழ் ஆங்கிலம் படிக்கலாம் மூன்றாவது மொழியாக விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம் என்று மத்திய அரசு சொல்கிறது அதை ஏன் ஸ்டாலின் எதிர்க்கிறார் என்று நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராதாரவி கேள்வி எழுப்பியுள்ளார்.வடமாநிலங்களில் மூன்றாவது மொழியாக தமிழை கற்பித்து  தமிழ்ப்பணியாற்றி வருவதாகவும் பாரதிய ஜனதா கட்சிக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்