விஜயகாந்த்துக்கு நெகட்டிவ்: பிரேமலதாவுக்கு பாசிட்டிவ்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்த்துக்கு கொரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறி இல்லை என்றும் பிரேமலதாவுக்கு பாசிட்டிவ் உறுதியாகியிருக்கிறது என்றும்  மியாட் மருத்துவமனை அறிவித்துள்ளது  இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரித்வி மோகன் தாஸ் வெளியிட்ட அறிக்கையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கடந்த செப்டம்பர் 20 ம்தேதி கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவருக்கு நோய்த்தொற்று உறுதியான நிலையில் சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 29 ம்தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார், 
பிரேமலதாவின் முதல் நிலை பரிசோதனைக்கு பின்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார், அவரது உடல் நிலை சீராக உள்ளது நோய்த்தொற்றுக்கான அறிகுறி இல்லை. தொடர் மருத்துவ சேவைகளின் காரணமாக விஜயகாந்த் நல்ல முன்னேற்றமடைந்திருக்கிறார், என்று அந்த செய்திக்குறி்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது