வாரிக்கோ சலுகைகள்
எலக்ட்ரானிக் நிறுவனங்கள் உற்சாகம்
தமிழகத்தில் மின்னணு மற்றும் வன்பொருள்துறைக்கான புதிய தொழிற்கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்,. இந்த புதிய தொழிற்கொள்கையில் புதிய மூதலீடுகளுக்கு 30 சதவீதம் வரைமானியம் வழங்கப்படும் என்றும் முதல்முதலாக நியமிக்கப்படும் தொழிலாளர்களுக்கு 6 மாதங்களுக்கு தலா ரூ 6000 வரை பயிற்சி உதவித்தொகை மானியம் வழங்கப்படும் என்றும் ஐந்தாண்டுகளுக்கு மின்கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்
கொரோனா கட்டுப்பாட்டுகளில் இருந்து இன்று முதல் முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டது, செயல்பாட்டுக்கு வந்தது, வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் மற்ற மாவட்டங்களுக்கும் பேருந்துகள் ஓடத்தொடங்கின, சென்னயில் மெட்ரோ ரயில் இயங்க துவங்கியது
சர்வதேச கண்தான தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கண்தானம் வழங்க ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டுள்ளார்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்பது குறித்து அமைக்கப்பட்ட முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழு, தனது பரிந்துரைகளைமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துதனது பரிந்துரைகளை தாக்கல் செய்தது
புதிய கல்விக்கொள்கைக்கு மக்களிடையே ஆதரவு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாாட்சியர்ராஜேந்திரனின் அறையில் பாம்பு புகுந்ததால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்துவந்ததீயணைப்பு துறையினர் பாம்பை பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்
சிபிஐ விசாரணை
விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும், பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்
தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் பொது நுழைவு தேர்வு தமிழ்நாட்டுக்கு ம்கிராமப்புற மாணவர்களுக்கும் பாதிப்பை யும் கூடுதல் சுமையை யும்ஏற்படுத்தும் என்றும்தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொடர்ந்துகடைபிடிக்கப்படும் என்றும் மத்திய மனிதவள த்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு அனுப்பிய கடிதத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் - கே.பி.அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
படப்பிடிப்புக்கு 75 பேர் மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பால் பாதியில் நிற்கும் 60 படங்களுக்கு பயன் ஏதும் இல்லை எனவே எனவே 100 பேர் பங்கேற்க அனுமதி வழங்குங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பெப்சி தலைவரும் இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்தார்,