குட்கா பாக்கெட்டுகள் விவகாரத்தில் தி.மு.க. எம்எல்ஏக்களுக்கு சட்டபேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விடாமல் தடுப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து திமுக வெளியிட்ட செய்திக்குறிப்பு,
2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ம்தேதி அன்று சட்டப்பேரவையில் குட்கா பாக்கெட்டுகள் மற்றும் புகைப்படங்கள் காட்டப்பட்டது தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் கடந்த 7ம்தேதி கூடிய பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான உரிமைக்குழு, 19.07.2017 (மூன்றாண்டுகளுக்கு முன்னர்) அன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து மீண்டும் விவாதித்ததாகக் கூறி தமிழகச் சட்டப்பேரவைச் செயலாளர், தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் இந்த நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, 14 ம்தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புது நோட்டீஸ்களின் நோக்கம் தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களை நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதில் இருந்து தடுப்பதும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தவறாகக் கையாண்ட விவகாரத்தைச் சட்டமன்றத்தில் எழுப்புவதைத் தவிர்க்கவுமே என்பது தெளிவாகிறது.
எனவே, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் இந்தப் புதிய நோட்டீஸ்களை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் புதிய ரிட் மனுவினைத் தாக்கல் செய்துள்ளனர் என்று தி.மு.க. வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு இல்லை
வரும் 14 ம்தேதி தமிழக சட்டபேரவைlசென்னை கலைவாணர் அரங்கின் மூன்றாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் கூட இருக்கிறது, இந்த நிலையில் முதலமைச்சர், துணைமுதலமைச்சர் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன.
இதில் முதலமைச்சருக்கும் துணைமுதலமைச்சருக்கும் நோய்த்தொற்று இல்லை என்று தெரியவந்திருக்கிறது. அதே போல் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு நடைபெற்ற பரிசோதனையும் முடிவும் நெகடிவ் என்று பேரவை வட்டாரங்க
அ.தி.மு.க.வை சேர்ந்த பொன்.சரஸ்வதி மற்றும் செய்யாறு எம்.எல்.ஏ தூசி மோகன் ஆகிய இருவருக்கும் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.