திருவொற்றியூர் குடியாத்தம் இடைத்தேர்தல் நடத்த இது பொருத்தமான நேரம் அல்ல என்று தேர்தல் ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது
தமிழக தலைமை செயலாளர் சண்முகம் அளித்த பேட்டி
தமிழகத்தில் திருவொற்றியூர்,குடியாத்தம் உள்ளிட்ட 3 சட்டப்பேரவைத்தொகுதிகளில் தற்போது உள்ள கொரோனா சூழ்நிலையில் இடைத்தேர்தல்தேர்தல் நடத்துவதுபொருத்தமானதாக இருக்காது என்று தமிழக அரசு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்எழுதியுள்ளது.இவற்றில் வெற்றிபெறும் வேட்பாளர்கள் ஒரே ஒரு கூட்டத்தொடரில்பங்கேற்க முடியும் என்பதால் அரசினபெரும்பான்மையை இந்த இடைத்தேர்தல்மாற்றபோவதில்லை என்பதால் தற்போது தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லைஎன தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது என்று அவர் தெரிவித்தார்
சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை
விவசாயிகளுக்கானபிரதமரின் ஊக்கத்தொகை திட்டத்தில் நடந்த முறைகேடு மாநில அரசுக்கு தெரியாமல் நடந்திருக்காது என்றும் ஒராண்டுக்கு முன்பே இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றும்
திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்
வேண்டாம் விபரீதம்
நீட்தேர்வு தொடர்பாக ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாவட்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ 7 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு சார்ந்த வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு எண்ணிலடங்கா வழிகள் இருக்கின்றன.இந்த நிலையில் விபரீத முடிவுகளை மேற்கொள்வது வேதனையளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்