காவிரி காப்பாளர் அல்ல


 


 


-இது குறித்து திமுகதலைவர் மு.க.ஸ்டாலின்அறிக்கை.


பா.ஜ.க.,வின் விவசாயிகள் விரோத மசோதாக்களை பா.ஜ.க.,வின் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி - வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. 13 கட்சிகள் அந்த மசோதாக்களை எதிர்க்கின்றன; அ.தி.மு.க. உள்ளிட்ட 4 கட்சிகள் மட்டும் ஆதரிக்கின்றன.  


அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்”, “விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம்”, “விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம்” ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து - தனது மேஜையில் வைத்துக் கொண்டு - ஊன்றிப் படித்துப் பார்த்துவிட்டு அல்லது அவற்றை அறிந்தோர் படிக்க, பக்கத்திலிருந்து கேட்டுவிட்டு, முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். “விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று உணர்ந்து சட்டங்களை ஆதரித்ததாக”க் கூறியிருப்பது, அர்த்தமற்ற செய்கையின் உச்சக்கட்டம்!


அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தின் கீழ் “இருப்பு வரம்பு” ஒழுங்குமுறைப்படுத்தவே கடும் நிபந்தனைகள் உள்ளன.தஞ்சாவூரில் உள்ள ஒரு விவசாயி - கார்ப்பரேட் நிறுவனத்துடன் போடும் ஒப்பந்தம் எப்படி இருக்க வேண்டும் (Model Agreement) என்பதை அரசு தயாரித்துக் கொடுக்கப் போவதில்லை; அதையே டெல்லிதான் கொடுக்கப் போகிறது. அது மத்திய அரசு சட்டத்திலேயே சொல்லப்பட்டுள்ளது என்பதை முதலமைச்சர் படிக்கவில்லை போலும்!


விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய மறுத்து - உச்சநீதிமன்றத்திற்கே சென்று தடை பெற்றவர், சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தைக் கொண்டு வந்து விவசாயிகளின் நிலங்களைப் பறித்திடத் தீவிரம் காட்டுபவர், ‘ய விவசாயிகள் வயிற்றில் அடித்தவர் - இன்றைக்கு விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கும் மூன்று சட்டங்களையும் ஆதரித்து விட்டு - கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் - விவசாயிகள் விரோத மத்திய பா.ஜ.க. அரசுக்கும் சாமரம் வீசுவதையும்; தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதையும்; வரலாறு மன்னிக்காது. ஆயிரம் முறை ‘விவசாயி’ என்று கூறிக்கொள்வேன் என்கிறார்; பள்ளியில் படிக்கும் மாணவன் தவறாக எழுதிவிட்ட சொல்லை ஆயிரம் தடவை சரியாக எழுதும்படி ஆசிரியர் தண்டித்ததைப்போல இருக்கிறது இவர் சொல்வது. இந்த காவிரிக் காப்பாளர் அல்ல; “காவிரி ஏய்ப்பாளர் என்று ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்