ரகுமான் - தனுஷ் இணைந்து ஹாலிவுட் ஆல்பம்

சூரரை போற்று அசுரன் படங்களை தொடர்ந்து ஹாலிவுட்டில் நுழைய ஆயததமாகி இருக்கிறார் இசை பாய்ச்சல் ஜிவி.பிரகாஷ்  உலக இசைக்கலைஞர்கள் மத்தியில் தனது தடத்தை பதிக்க ஆங்கிலத்தில் ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார் கோட் நைட்ஸ் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்தில் ஹை அண்ட் ட்ரை என்ற பாடல் வரும் 17 ம்தேதி வெளியாகலாம். இந்த இசைப்பாய்ச்சலில் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர்  இணைந்துள்ளனர்  இவர்களோடு முன்னணி நடிகர்கள் இயக்குனர்கள் இசையமைப்பாளர்களும்  ஜி.வி.பிரகாஷ்க்காக ஒன்றிணைகிறார்கள் .ஜீ.வி.பிரகாஷின் முதல் ஆங்கில தனிப்பாடல் \ஜிவி மற்றும் ஜூலியா இருவரும் இணைந்திருக்கும் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார், எலக்ட்ரானிக் பாப் வகை பாடலான இது காதலர்களுக்கு இடையேயான மனமுறிவில் இருக்கும் உணர்ச்சிகளுக்குள் ரசிகர்களை இழுத்துச் செல்லும்.  ஒரே நேரத்தில் காதலனின் அரவணைப்பிலும் அதே நேரம் குளிர்ச்சியான இரவில் தனிமையில் இருப்பது போலவும் பிரிந்து சென்ற காதலர்களுக்குள் இருக்கும் குழப்பத்தை உருவகப்படுத்திச் சொல்கிறது இந்தப் பாடல்.