கமலாலயத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்

 



இடைத்தேர்தல் எப்போது


*கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர்  வசந்தகுமார், கடந்த 28 ம்தேதி சென்னையில் காலமானார், அதன்காரணமாக கன்னியாகுமரி நாடாளுமன்றத்தொகுதி  உறுப்பினர் பதவியிடம் காலியானதாக  நாடாளுமன்ற  செயலாளர் (பொது) சினேகலதா  ஸ்ரீவத்சவா அறிவித்துள்ளார், வசந்தகுமார் மறைந்த ஒரிரு  நாட்களில் கன்னியாகுமரி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது, ,. பாஜகவில் வேட்பாளர் பொன்,ராதாகிருஷ்ணனாமே அவரில்லையாமே இவரா என்று ] தீவிர விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன,  இதற்கிடையில் நான் அரசியலுக்கு வரவேண்டும் என தந்தையின் நண்பர்கள் விரும்புகின்றனர்; காங்கிரஸ் கட்சி முடிவெடுத்தால் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவேன் என்று வசந்தகுமாரின் மகன் - விஜய் வசந்த் அறிவித்துள்ளார். இந்த நிலையில்  கன்னியாகுமரியில் இடைத்தேர்தலுக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை. சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு ஆறு மாதமே கால அவகாசம் இருப்பதால் அந்த தேர்தலும் அப்போதும் தான்  நடக்கும் என்று சிலர் ஆருடம் கணிக்கின்றனர், கன்னியாகுமரி மக்கள் இடைத்தேர்தல் மூடுக்கு வருகிறார்களோ இல்லையோ அரசியல் வாதிகள் ஆர்வத்தோடு அலைபாய்கிறார்கள் 


வல்லுனர் குழுவா


*தேசிய கல்விக்கொள்கை குறித்து  பரபரப்பு விவாதங்கள் நடைபெற்று முடிந்த நேரத்தில்  அதற்காக குழு சிறந்த கல்வியாளர்களை கொண்டு விரைவில்  அமைக்கப்படும் என்று அறிவித்தார், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தற்போது, புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு இந்த  குழுவில் பள்ளிக்கல்வி தொடர்பான வல்லுநர் ஒருவரும் இல்லை.இது கல்வியாளர் குழுவா? கண்துடைப்புக் குழுவா? என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் - துரை.ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார் 


*தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண் ஸ்ருதியுடன் பிரதமர் மோடி உரையாடினார், அப்போது அவர் கொரோனா காலத்தில் காவல்துறை அதிகாரிகளின் மனிதநேயமிக்க முகம் மக்களின் மனதில் பதிந்துள்ளது - என்று காவல்துறையினருக்கு புகழாரம் சூட்டியுள்ளார், கண்டிப்பாக அவர் சாத்தான் குளம் சம்பவத்தை சொல்லவில்லை என்று நம்பலாம் 


*செப்டம்பர் மாத இறுதிக்குள்ளோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ சசிகலா விடுதலை ஆவார் என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
\


 



 


கமலாலயத்தை கலாய்க்கும் நெட்டீசன்கள்


*திமுக துணைப்பொது செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி, அக்கட்சியில் இருந்து விலகி திடீரென்று பாஜகவில் சேர்ந்தார் அவரை தொடர்ந்து  ஆயிரம் விளக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்  கு.க.செல்வம் பாஜகவின் அகில இந்திய பொதுசெயலாளர் நட்டாவை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது, இதையடுத்து பிரபல ரவுடி கல்வெட்டு ரவி பாஜகவில் சேர்ந்தது, பலரை  அதிர்ச்சியடைய வைத்தது, சென்னையில் ஒரு ரவுடி பாஜகவில் சேர முற்பட அடுத்த நிமிசம்  அந்த பக்கம், போலீஸ் படை முற்றுகையிட ஆள் எஸ்கேப், பாஜகவினர் ரவுடிகளை  கட்சியில் சேர்ப்பதை சீரியசாக பார்த்த இடது சாரிகள்,வடமாநிலத்தை போன்றே பாஜக ரவுடிகளை சேர்த்து மதக்கலவரத்தை உருவாக்க பார்க்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளனர், நெட்டிசன்கள் அதுபற்றியெல்லாம் கவலைக்கொள்ளவில்லை, ரவுடிகள் கட்சியில் சேர்வதை சீரியசாக்கவில்லை. இனிமேல் செயின் பறிப்பு கொள்ளையரிடம்  நகைகளை கழற்றி கொடுத்து  விட்டு கமலாலயத்தில் சென்று திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று மீம்ஸ்களால் பாஜகவை கலங்கடிக்கிறார்கள், இடது சாரிகள் நெட்டிச இளைஞர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது, 


*பத்திரிகையாளர் சுதாங்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,   வீட்டில் தவறி வுிழுந்ததன் காரணமாக  எலும்புமுறிவு  ஏற்பட்டுள்ளதாகவும்  சுவாச நோய்களும் அவரை  பாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர், 

*செப்டம்பர் மாதம் முதல்  பள்ளிகள் திறக்கும் வரையில்  மாணவர்களுக்கு சத்துணவில் தலா 10 முட்டைகள் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது, 


*செமஸ்டர் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை வரும் 19 ம்தேதி நீட்டிபு்பு வரை  செய்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது,  
*கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது முதல் நிகழ்ச்சியாக ஐபிஎஸ் பயிற்சி முடித்த மாணவர்களின் வழியனுப்பு விழாவில்  காணொளிக்காட்சி மூலமாக பங்கேற்றார், 


*தமிழக சட்டமன்றம் வரும் 14 ம்தேதி  கலைவாணர் அரங்கில்  கூட இருக்கிறது, எத்தனை நாட்கள் இந்த கூட்டம் நடைபெறும் என்பது தொடர்பாக முடிவெடுக்க வரும் 8 ம்தேதி சட்டபேரவை தலைவர் தனபால் தலைமையில்  அலுவல் ஆய்வுக்குழு கூடுகிறது  


*காட்டுமன்னார்கோவில்  குறுங்குடி கிராமத்தின் அருகே உள்ள இடைநாறூர் என்ற பகுதியில்  கனகராஜ் என்பவரின் பட்டாசு தயாரிக்கும் ஏற்பட்ட வெடி விபத்தில்   9 பேரும் பெண்கள் உயிரிழந்த செய்தி அம்மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது,