ஊரடங்கு தொடர்கிறது மின்சார ரயிலுக்கு தளர்வில்லை

கொரோனா ஊரடங்கு வரும் அக்டோபர் மாதம் முழுவதும் மேலும் தொடர்கிறது.சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. அக்டோபர்1 ம்தேதி பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களிடம் சந்தேகத்தை தீீீீர்த்து கொள்ளலாம் என்ற  அரசாணை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்


 


திரைப்பட படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டிநெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 100 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போதுபார்வையாளர்களுக்குஅனுமதி கிடையாது


 


*தற்போது நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்களில்இருந்து 50 விமானங்கள் தரையிறங்க அனுமதித்துள்ளது. இனி 100 ரவிமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது. கோயம்புத்தூர்,திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலைனயங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்.


 தமிழ்நாட்டில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொதுஇடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.


 


·தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்


பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து றனக்கல்விநிறுவனங்களின் செயல்பாட்டிற்கான தடை தொடரும்


திரையரங்குகள் நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல்பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள்அதிகம் கூடும் இடங்களில் தடை நீடிக்கும்.·


 


*மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.·


 


*புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துமதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள்,கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடைதொடரும்.


பொதுமக்கள், அரசு எடுத்துவரும் இத்தகைய முயற்சிகளுக்கு ஒத்துழைப்புநல்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்