50ஆண்டுகளில் 40ஆயிரம் பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்த எஸ்.பி.பி இனி பாடமாட்டார் . ஆயிரம்.கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை நுங்கம்பாக்கம் எம்ஜிஎம் ஹெல்த் கேரில் எஸ்பிபி அனுமதிக்கப்பட்ட போது படுக்கையில் இருந்தபடியே நான் நலமாக தான் இருக்கிறேன் என்று கைகளை உயர்த்தி காண்பித்தவர் இப்போது உயிருடன் இல்லை என்றால் நம்ப முடியவில்லை
ரஜினிக்கு, நான் பொல்லாதவன்,மைநேம் இஸ் பில்லா ,ஒருவன் ஒருவன் முதலாளி,கமலுக்கு நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் தருமே ,கம்பன் ஏமாந்தான் .சிம்லா ஸ்பெஷல் படத்தில் உனக்கென்ன மேலே என்றால் ஒ நந்தலாலா ஆகிய பாடல்கள் ,கமலும் ரஜினியும் இணைந்து நடித்த 16வயதினிலே படத்தில் செவ்வந்தி பூவெடுத்த சின்னக்கா /ரோஜா படத்தில் காதல் ரோஜாவே,இது ஒரு பொன் பாங் பொழுது பருவமே புதிய பாடல் ,)மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையே போன்ற பாடல்கள் மட்டுமல்ல அவருடைய ஆயிரக்கணக்கான பாடல்கள் இப்போதும் ரீங்காரமிட்டு கொண்டிருக்கின்றன
கமல்ஹாசன் நடித்த ஏக் துஜே கேலியே என்ற படத்தின் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தபோது உங்களுக்கு இந்தி தெரியுமா என்று எஸ்பிபியிடம் கேட்கப்பட்டது.அவர் ரொம்ப கூலாக எனக்கு இந்தி தெரியாதுபோடா பாணியில் சொன்னபோது றறஅதிர்ச்சியடைய வைத்தது.சங்கரா பரணம் பாடலுக்கு தேசிய விருது கிடைத்த போது தனக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது என்று சொன்ன போது இசை மாமேதைகள் கொஞ்சம் ஆச்சரியத்துடன் தான் பார்த்தனர்.
எம்ஜிஆர் தனது அடிமை பெண் படத்திற்காக எஸ்பிபியை பாட அழைத்த போது அந்த நேரத்தில் டைபாய்டு காய்ச்சல் வந்ததால் பலரும் பரிதாபப்பட்டு அடுத்த சூட்டிங் வேலையை பார்க்க சென்று விட்டனர்.ஒரு மாதத்திற்கு பின்னர் ஆயிரம் நிலவே பாடலை பாட சொல்லி எம்ஜிஆர் அழைத்த போது எஸ்பிபி இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தார்.எம்ஜிஆரின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றார். அதற்கு பாலுவுக்கு எல்லாமே வெற்றிகரமாக அமைந்தது இயக்குனர் வசந்தின் கேளடி கண்மணி படத்தில் மூச்சு விடாமல் எஸ்பிபி பாடிய மண்ணில் இந்த காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ என்ற பாடல் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரையும் வாயசைக்க வைத்த பாடல் பாடிய அந்த மூச்சடங்கி போவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.கொரானோ என்ற கொடிய அரக்கன் அவரை பாதித்த போது எளிதில் பிழைத்து விடுவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள் அது போன்றே மருத்துவமனையில் இருந்து வந்த தகவல்களும் தெரிவித்தன.ஆகஸ்ட் 14ம்தேதிக்குபின்னர் எஸ்பிபியை பீடித்திருந்த கொரானோ கூட விலகி விட்டது . நேற்று பகல் நேரத்தில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு தான் அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்து விட்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.எல்லாம் முடிந்து விட்டது தாமரைப் பாக்கத்தில் எஸ்பிபி உடலுக்கு சாரிசாரியாக ரசிகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.பிரதமர் மோடி ,முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்று கட்சிகளை கடந்து மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக அமைந்த சங்கீத சாகரத்திற்கு இரங்கல்கள் தெரிவித்திருக்கின்றனர் இன்னும் சில மணி நேரத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடந்து முடிந்தது.எந்த அரசு பதவியிலும் இல்லாத எஸ்பிபிக்கு கொடுக்கப்பட்ட அரசு மரியாதையை அனைத்து கட்சிக்ஷகளும் ஆமோதித்து கொண்டிருக்கின்றன ஏனெனில் எஸ்பிபி பாடிய பாடல்கள் அதற்கே உரிய கம்பீர குரலோடு எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது தான். வாழும் ஒவ்வொரு கணமும் நடிகர். டப்பிங் கலைஞர் என்று பன்முக திறன்களை வெளிப்படுத்தி
வரலாறு படைத்தவர் .
சாகும் போதும் அரசு மரியாதையை பெற்று சத்தமில்லாமல் சரித்திரம் படைத்து விட்டார்.பல்லாயிரக்கணக்கில் பாடல்களை பாடிய பாட்டுடைத் தலைவனுக்கு பாரத் ரத்னா விருது வழங்குவதற்கான நடவடிக்கைகளை திரையுலகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது இதற்கிடையில் சினிமா வட்டாரத்தில் எஸ்பிபி தன்னுடைய மரணத்தை முன் கூட்டியே கணித்து தனக்கு சிலை செதுக்க ஒரு சிற்பியின் உதவியை நாடியுள்ளார் என்பது தான் அந்த தகவல் ஆனால் எஸ்பிபி தனக்கான மிக பெரிய ஒளி வட்டத்தை உருவாக்கி கொள்ளாதவர்.தனக்காக சிலை செதுக்க ஒப்புக்கொள்ள மாட்டார்.அந்த சிலை எஸ்பிபி மீதான அபிமானத்தில் அவரது நண்பரான சிற்பி பரிசாக வழங்கியிருக்கலாம் என்கிறார் கள்