அதிமுக பொதுக்குழு கூடுகிறது

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்


அதிமுகபொதுக்குழு விரைவில் கூடுகிறது


மழை விட்டாலும் தூறல் விடவில்லை என்பது போல் அதிமுகவில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் பிரச்னை இன்னும் ஓயவில்லை.பொதுவெளியில் விவாதிக்க கூடாது என்று முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் அறிவித்த பின்னரும் 2021ஆம் ஆண்டிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  தான் என்று  கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் கூறியது அதிமுக வட்டாரத்தை  உலுக்கியிருக்கிறது.இந்த நிலையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது.இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் டுவிட்டரில் பதிவிட்டு அக்கட்சியினரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் இந்த கூட்டத்தில் அதிமுகவின் பொதுக்குழு   கூட்டப்படும் தேதி குறித்து முடிவெடுக்க ப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது