திமுகவில் இணைந்த மாஜி பாஜக கவுன்சிலர்

ஆர்.கே.நகரில் பாஜக கவுன்சிலராக இருந்த பிஎஸ்எஸ்.தனுஷ்கோடி. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்


வடசென்னையில் இந்து முன்னணி ஆர்எஸ்எஸ் பாஜக வட்டாரத்தில் அதிகம் அறியப்பட்டவர்.சென்னை மாநகராட்சி மன்றத்தில் முதல் பாஜக கவுன்சிலர் பிஎஸ்எஸ் தனுஷ்கோடி அண்மையில் திமுகவில் இணைந்தார்


திடீரென்று திமுகவில் சங்கமமானது ஏன் என்று கேட்ட போது  திடீரென்று சேரவில்லை திமுக நிலைப்பாட்டில் தான் இருந்தேன் ஆர்எஸ்எஸ் பின்னணியில்  தான் பாஜக இருக்கிறது ஆர்எஸ்எஸ் பாஜக பின்னணியில் 50க்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கின்றன பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகாரத்திற்கு தகுதியானவர்கள் இல்லை என்பது பாஜக பின்னணியில் உள்ளவர்களின் நிலை அதற்கு தகுதி படைத்தவர்கள் யார் என்ற போராட்டம் தான் இப்போது நடந்து வருகிறது ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கும் திராவிட சித்தாந்தத்திற்கும் நடைபெறும் போராட்டத்தில் நான் திராவிடம் பக்கம் நிற்க வேண்டும் என்பதால் திமுகவில் சேர்த்திருக்கிறேன் என்றார் தனுஷ்கோடி