விஜய்யின் கில்லி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ரூபன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்
போலீஸ் செய்தி உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் செய்தியாளராக பணியாற்றியவரும் திரைப்பட நடிகர் சின்னத்திரை இயக்குநர் என பன்முக பார்வையில் இயங்கியவருமான ரூபன் திருச்சியில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான அண்ணாமலை தொடரில் பந்தா முருகன் பாத்திரத்தில் ரூபன் நடித்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. தளபதி விஜய் நடித்த கில்லி படத்தில் ரூபன் அம்பயராக வந்து அசத்தியிருப்பார்