பள்ளிகள் திறப்பு மக்கள் வரவேற்பு

இந்தியா முழுவதும் செப்டம்பர் 21 ம்தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள்  பள்ளிகளுக்கு சென்று  ஆசிரியர்களிடம் தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம் என்று மத்திய அரசு  அறிவித்தது இது குறித்து ஆய்வு செய்த தமிழக அரசின் பள்ளிக் கல்வி த்துறை பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2  வரையிலான மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களை சந்தித்து சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது இதை தொடர்ந்து  வரும் அக்டோபர் 1ம்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது கிட்டத்தட்ட ஆறு மாத இடைவெளிக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் தேதிஅறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது 


செப்டம்பர் மாதம் 31தேதியுடன் எட்டாம் கட்டமாக தளர்வுகளுடனான ஊரடங்கு அறிவிப்பு  முடிவடைகிறது 


இதைத்தொடர்ந்து வரும் 29 ம்தேதி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார்.இந்த ஆலோசனையின் போது புறநகர் மின்சார ரயில் இயக்கப்படுவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 


 கொரோனா என்ற கொடிய பேரிடர் மனித குலத்திற்கு அளித்த மிக பெரிய நம்பிக்கை நம்முடைய பாரம்பரிய மருத்துவமாக அமைந்திருக்கும் சித்த மருத்துலமாகும் அத்தகைய அரிய களஞ்சியமாக விளங்கும் சித்த மருத்துவத்தை மேம்படுத்த சிறப்பு மையத்தை அமைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.வரவேற்கதக்கது அதனை தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் அமைக்க வேண்டும் என்று பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்


கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட் வரும் 28ம் தேதி திறக்கப்படுகிறது. இதை  தொடர்ந்து மூன்று நாட்களுக்கு முன்னதாகவே வியாபாரிகள்  கடை ஊழியர்கள் அனைவரும்  கட்டாயம் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.வாரந்தோறும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் வகையில்  ஒட்டு மொத்த கோயம்பேடு கடைகளுக்கும்  விடுமுறை விடப்படவேண்டும் என்றும்  வியாபாரிகளுடன்   நடத்திய ஆலோசனை அடிப்படையில் தமிழக அரசு அறிவித்துள்ளது 


கொரோனா கொடுமைக்கிடையில் ஆன் லைன் கல்வி பயிற்சி எனும் மாணவர்களை உளவியல் ரீதியாக கொல்லும் திட்டத்திற்கு முடிவு கட்ட பள்ளிகள் திறப்பும் அடிக்கடி காய்கறிகள் விலை உயர்வுக்கு வழி வகுத்த திருமழிசையில் இருந்து மீண்டும் கோயம்பேடு மார்க்கெட் திறப்பையும் மக்கள் வரவேற்பார்கள்.அரசும் வியாபாரிகளும்  அடிக்கடி விலைகளை உயர்த்தாமல்  மக்களை பாதுகாக்க வேண்டும்