திமுகவில் நயனதாரா -ஜெயகுமார் அட்வைஸ்

எண்ணுார் கடல் முகத்துவாரத்தை தூர்வாரும்படி வலியுறுத்தி, அங்குள்ள காட்டுக்குப்பம் நெட்டுக்குப்பம் பெரியகுப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று எண்ணுார் துறைமுக நுழைவாயிலில் நுாதன போராட்டம் நடத்தினர், 500க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்துகொண்டனர், மீனவ மகளிர் நுாற்றுக்கணக்கில் திரண்டு மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்


 


சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கவச உடையுடன்சென்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு.மேற்கொண்டார்


 


தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக ராஜேஷ்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்,


 


இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம.கோபாலன் தனது 94 வயதில் உடல் நலக்குறைவால் காலமானார், அவரது மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் திமுக தலைவர் ஸ்டாலின் திகதலைவர் கீ வீரமணி  இரங்கல் தெரிவித்துள்ளனர்


 


அக்டோபர் 2 ம்தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி கிராமசபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, இந்த கூட்டங்களில் மத்திய அரசின் வேளாண்மை குறித்த மூன்று சட்டங்களை எதிர்த்து கண்டன தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்


 


அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் பழனிசாமி தான் அதில் எந்த மாற்றமும் இல்லை: வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  


 


ஒரே நாடு ஒரு ரேஷன்கார்டு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைசெயலகத்தில் தொடங்கி வைத்தார்


 


ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட மெட்ராஸ் தமிழில் சென்னை ஆக மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்ட நாளிது,. முன்னாள் முதல்வர் கருணாநிதி இந்த பெயர்மாற்றத்திற்கான அரசாணையை வெளியிட்டார், 


அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஓசாமா பின்லேடனைதொடர்ந்து நடிகை நயனதாராவையும் திமுக உறுப்பினராக சேர்க்கலாம்


அமைச்சர் ஜெ யகுமார் கிண்டல்


2019  2020 ஆம் ஆண்டுக்கான  வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கெடுவை வரும் நவம்பர் 30ம் .வரை வரிகள் முறையீட்டு ஆ ணையம் அறிவித்திருககிறது


நாடு முழுவதும் வரும் 10ம் தேதி 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது