நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்ட கருத்துக்கு ஆதரவு குவிகிறது
நீட்தேர்வு குறித்து நடிகர் சூர்யா விடுத்த அறிக்கையில் நீதிமன்றம் தொடர் பாக வெளியிட்ட கருத்துக்கு வழக்கறிஞர்கள் சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் சூரியா வின் கருத்துக்கு ஆதரவு குவிந்த வண்ணம் இருக்கிறது. சந்துரு. அரிபரந்தாமன் உள்ளிட்ட புகழ் பெற்ற நீதயரசர்களும்என்.ஜி.ஆர் பிரசாத், சுதா ராமலிங்கம் உள்பட ஏராளமான சட்டவல்லுனர்களும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர். சூரியா மீது நடவடிக்கை எடுப்பது கருத்து சுதந்திரத்தை முடக்குவதற்கு சமமானது என்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு முன்னாள் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் கடிதம் எழுதியுள்ளனர். மற்றொரு பக்கம் பொதுவெளியிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன
இதற்கிடையில் நடிகர் சூர்யாவின் கருத்துக்குமனிதநேய ஜனநாயக பேரவையின் தலைவரும் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரியும் ஆதரவு தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ஜனநாயக வழியில் மக்களின் உணர்வுகளை எதிரொலித்த நடிகர் சூர்யா மீது நடவடிக்கை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதோடு, இது கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் செயலாகவே கருதப்படும்.என்று குறி்ப்பிட்டுள்ளார்
இது தொடர்பாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில்
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. இக்கல்லூரிகளில் ஒடுக்கப்பட்ட, பிற்பட்ட மற்றும் ஏழை, எளிய மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படித்து மருத்துவர்களாகித் தமிழ்நாட்டு மக்களுக்குத் தொண்டாற்றுகிறார்கள். இதற்கு நீட் தேர்வு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இத்தேர்வின் மூலம் வெற்றிபெறும் மாணவர்கள் அகில இந்திய அளவில் தரவரிசைப் படுத்தப்படுகிறார்கள். இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய இடங்கள் பறித்தெடுக்கப்படுகின்றன. இதன் விளைவாகத் தமிழகத்தில் படித்து மருத்துவப் பட்டம் பெறும் பிற மாநில மாணவர்கள் தங்களின் மாநிலங்களுக்குத் திரும்பி மருத்துவத் தொண்டு ஆற்றுவார்களே தவிர, தமிழ்நாட்டு மக்களுக்குத் தொண்டாற்ற வரமாட்டார்கள். இந்நிலைத் தொடர்ந்தால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் போதுமான மருத்துவர்கள் இல்லை என்ற நிலை உருவாகிவிடும்.
இத்தகைய அநீதியான நீட் தேர்வு முறைக்கு எதிராக கடமையுணர்வுடனும், தமிழன் என்ற பொறுப்புணர்வுடனும் குரல் கொடுத்த நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். சூரியா வி கருத்தை தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பல அமைப்புகள் போராட்டங்களை நடத்த தொடங்கியுள்ளனர்