சிலை மனிதன் உயிரோடு இருக்கிறார்
விஜிபி தங்கக் கடற்கரையின் நுழைவு வாயிலில் சிரிக்காமல் சிலையாக நின்று கொண்டிருந்த மனிதரை பற்றி பல்வேறு வதந்திகள் உலா வந்த வண்ணம் இருந்தன அவர் சிலையாக நிற்க முடியாமல் வேறு வேலை தேடுவதாக ஒரு செய்தி மற்றொரு செய்தி அல்ல கொரோனா நோய்த்தொற்றால் அவர் இறந்து விட்டார் என்று காட்டுத்தீ போன்று வதந்திகள் பரப்பப்பட்ட ன.
இந்த வதந்திகளை கேட்டு சிரிக்காத அந்த சிலை மனிதர் நீண்ட நாட்கள் கழித்து வாய் விட்டு சிரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் சிலை மனிதர் குறித்த வதந்திகளை கேட்டு விஜிபி தங்கக்கடற்கரை நிர்வாகம் வருத்தத்தையும் வேதனையையும் தெரிவித்திருக்கிறது
சிலைமனிதருக்கு கொரோனாவோ அல்லது எந்த வித நோயோ இல்லை. அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் மீண்டும் விஜிபி பொழுது போக்கு பூங்கா பயன்பாட்டிற்கு வரும்போது மக்களை மகிழ்ச்சியூட்ட தயாராக இருக்கிறார் என்று விஜிபி நிர்வாகம் அறிவித்துள்ளது.