மலேசியாவில் கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடும் தமிழ்நாட்டுச் சிறுமி!
சென்னையை பூர்வீகமாககொண்ட கமீல்,அஃரினா என்றும் தம்பதியர் மகள் ரெய்னா. மலேசியாவில் உள்ள பள்ளியொன்றில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் பீதியூட்டி வரும் நிலையில் சிறுமி ரெய்னா இதற்கான விழிப்புணர்வு பாடலை நடனமுடன் பாடி வருகிறார்.
வீட்டில் மட்டுமல்லாது பள்ளியில் தனது நண்பர்களிடமும் இதனை பாடிக் காட்டி அவர்களையும் பாடி பரவசப்படுத்துகிறார் கைகளை கழுவுங்கள், சமூக இடைவெளியை பின்பற்றுங்கள், கொரோனாவை தடுப்போம் என்ற வகையில் ஆங்கிலத்தில் இவர் பாடும் குழந்தைத்தனமான ஆடலும் பாடலும் இணையதளத்தில் வேகமாக பரவி டிரெண்ட் ஆகி வருகிறது.