கண்டுபிடித்தது நாங்க தான்

விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் பிரதமரின்‌ திட்டத்தில் முறைகேட்டை கண்டு பிடித்ததே நாங்கள் தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்


 


இந்த திட்டத்தில் 41லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.ஆனால் 4மாதத்தில்  மளமளவென 4லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டதில் சந்தேகம் ஏற்பட்டது.அதனால் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்காரணமாக18பேர் கைது செய்யப்பட்டார்கள். 34 அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது 81 ஒப்பந்த பணியாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர் மோசடி பணத்தை திரும்ப பெற தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்