இருமல் தும்மலுக்கு முக்கியத்துவம் ஸ்டாலின் பொருமல்

பரபரப்பான சூழ்நிலையில்  திமுக  பொதுக்குழு காணொளி காட்சி மூலமாக இன்று கூடியது.இக்கூட்டத்தில் திமுகவின் புதிய  பொதுசெயலாளர் பதவிக்கு  துரைமுருகன் போட்டியின்றி  தேர்வு செய்யப்பட்டார்.மாநிலம் கடந்து67 இடங்களில்நடைபெற்றஇந்தபொதுக்குழுவை சென்னைஅறிவாலயத்தில் காணொளி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் துரைமுருகன் டிஆர் பாலு உள்ளிட்ட தலைவர்கள் ஒருங்கிணைக்கின்றனர் இந்த பொதுக்குழுவில் ஏற்கனவே உள்ள துணை பொது செயலாளர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா மற்றும் பேராசிரியர் பொன்முடி ஆகியோருக்கும் புதிய துணை பொது செயலாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.திமுக பொருளாளராக டிஆர் பாலு ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்.கடந்த சில நாட்களாக திமுகவினர் இருமுவதையும்தும்முவதையும் பத்திரிகைகள் பூதாகரப்படுத்தியதாக கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் சாடினார்


திமுக மீது ஆர்வமும் அக்கறையும் செலுத்தும் பத்திரிகைகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்


திமுகவில் பொருளாளர் எ.வ.வேலுவுக்கு தான் கிடைக்கும் என்று பலர் ஆரூடம் கூறி வந்த நிலையில் இன்று நடைபெற்ற பொதுக்குழு வில் அவருக்கு எந்த பதவியும் அறிவிக்கப்படவில்லை


 


மாநிலம் முழுவதும் பல்வேறு அரங்கங்களில் காணொளி காட்சி மூலம் பிரம்மாண்டமாக நடத்தப்படும் முதல் பொதுக்குழு என்ற பெருமையை திமுக பொதுக்குழு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது


பள்ளிகள் திறப்பு


செப்டம்பர்21ம்தேதி முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.9ம் வகுப்புகள் முதல் பிளஸ் 2 வரை மாணவர்கள் பள்ளிக்கு  வந்து ஆசிரியர்களிடம் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம் என மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது


 


விண்ணப்பங்கள்


இலவசகட்டாயக் கல்வி உரிமை சட்ட அடிப்படையில் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 விழுக்காடு ஒதுக்கீட்டி ல் மழலையர் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை  மாணவர்களை சேர்ப்பதற்கு செப்டம்பர் 25ம்தேதி வரை விண்ணப்பங்கள் பெற தமிழக அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது.இதற்கிடையில் ஏழை மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் வேறு மாணவர்களை சேர்க்க்கக்கூடாது என்றும் இது தொடர்பாக செய்தித்தாள்களில் மக்களுக்கு முறையாக அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்றும் அதற்காக நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள் குறித்த தகவல்களையும் வெளியிட வேண்டும் என்றும்சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது


எம்எல்ஏக்களுக்கு சோதனை


தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர்      வரும்    1 4ம்தேதி சென்னை கலைவாணர் அரங்கின் மூன்றாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் கூட உள்ளது. முதல் நாளில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மற்றும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பின்னர் அவை ஒத்தி வைக்கப்படும் என்றும் வரும் 16ம்தேதி வரை  நடைபெறும்சட்ட பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க உள்ள உறுப்பினர்கள்  பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் 72 மணிநேரத்திற்கு முன்னதாக கட்டாயம் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது