சசிகலாவை மையப்படுத்தி வாக்குவாதம்

அதிமுக செயற்குழு இன்று கட்சியின்  தலைமைக்கழக அலுவலகத்தில் காரசாரமாக நடந்தது வழியெங்கும் துணைமுதல்வர் ஒபிஎஸ் முகக்கவசங்களை அணிந்தபடி தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்து அசத்தினர்.சாமானிய முதல்வரே விவசாயிகளின்விடிவெள்ளியே வருக என்றழைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பளிக்கப்பட்டது பரபரப்பான விவாதங்களுடன் நடந்த செயற்குழு வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி முனுசாமி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இணைந்து வரும் 7ம்தேதி  அதிமுக அலுவலகத்தில் அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார்.முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் இடையே  கடும் வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது இதில் நீங்கள் சசிகலாவால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் என்று துணை முதலமைச்சர் கூற எடப்பாடி பழனிச்சாமி  அதை மறுக்கவில்லையாம்.அதற்கு மாறாக இன்னொரு குண்டை தூக்கிப் போட்டாராம்


நான் மட்டும் அல்ல நீங்களும்  கூட சசிகலாவால் முதலமைச்சர்


ஆக்கப்பட்டவர் தான் என்றுகூறியுள்ளாராம். அதிமுக வட்டாரத்தில் சசிகலாவை மையப்படுத்தி நடந்து வரும் வாக்குவாதங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது