தற்கொலை தீர்வு அல்ல

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் காரணமாக தற்கொலை முயற்சிவேண்டாம் என்று மாணவர்களுக்கு முன்னாள் மத்திய  சுகாதாரத்துறை அமைச்சர்   மருத்துவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்


இது குறித்து அவர் வெளியிட்ட சுட்டுரை (டுவிட்டர்) பதிவு


 


 நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதை தாங்கிக் கொள்ள முடியாமல் செஞ்சி மாணவி ரம்யா தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. நீட் என்ற சமூக அநீதிக்கு எதிராக போராடி வெற்றி பெறுவதே தீர்வு. தற்கொலை தீர்வு அல்ல!


நீட் தேர்வால் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்னும் எத்தனை பேரின் உயிரை நீட் காவு வாங்கப் போகிறதோ? நீட் தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் எவரும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன் என்று தனது சுட்டுரையில் அன்புமணி தெரிவித்துள்ளார்.


 


மா.கம்யூ ஆர்பாட்டம்


இதற்கிடையில்அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி வரும் 20ம்தேதி ஆளுநர் மாளிகை முன்பும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டமும் நடத்த போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்