.சென்னையில் 1 லட்சம் காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் .எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு, நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் உள்ளாட்சித்துறை அமைச்சர் .எஸ்.பி.வேலுமணி தலைமையில்தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அமைச்சர் .எஸ்.பி.வேலுமணி
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பரிசோதனைகளை அதிகரித்தல், காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள், வீடுகள் தோறும் சென்று வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நபர்களை கண்டறிதல், வைரஸ் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துதல் போன்ற பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் வைரஸ் தொற்று சென்னையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சியில்தான் அதிகமாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அன்றாட தேவைகளான காய்கறி, பழங்கள் மற்றும் இதரப் பொருட்களை வாங்க அங்காடிகளுக்கு செல்கின்றனர்.
அந்த இடங்களில் பொதுமக்களுக்கு பிற விற்பனையாளர்களிடமிருந்து தொற்று பரவாமல் தடுப்பதற்காக வியாபாரிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.. இதுவரை 1,00,124 விற்பனையாளர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர். இதன் முலம் தினமும் சந்தைகளுக்கு வருகைதரும் பொதுமக்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கப்படுகிறது. சென்னையில் 22,808 வீடுகளும், 1.82 லட்சம் பேரும் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்தார் .
காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை