தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் வழங்க வகை செய்யும் சட்டமசோதா கடந்த சட்டமன்ற பேரவை கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு இது ஆளுநர் பன்வாரி லால் புரோகித் இதுவரை ஒப்புதல் தரவில்லை. இது குறித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் அரசு பள்ளி மாணவர்களின் நிலையை எண்ணி நீதிபதி கிருபாகரன் கண்ணீர் விட்டார். இது குறித்து பதில் மனுதாக்கல் செய்த தமிழக அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக ஆளுநர் முடிவெடுத்த பின்னர் தான் தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. தமிழக அரசு வைத்த இந்த செக்கை தொடர்ந்து ஆளுநர் முடிவென்ன என்பதை தாமதிக்காமல் அறிவிக்கவேண்டும் என்று நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் ஆர்வத்துடன் எதிர் பார்த்து காத்திருக்கின்றனர்.
பெண்ணின் திருமண வயது 18. இது ஆட்டோக்களில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் மட்டுமல்ல. தற்போது பெண்களின் திருமண வயது தொடர்பாக முடிவெடுக்க மத்திய அரசு குழுவொன்றை அமைத்திருக்கிறது.அந்த குழுவின் முடிவு என்ன என்று பிரதமருக்கு ஆயிரக்கணக்கான கடிதங்கள் வந்திருக்கிறதாம் விரைவில் முடிவு வெளியாகும் என்று எதிர்பார்ப்போம்